பிரபல இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன்.. பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கு இரண்டாவது திருமணம்! தேதி குறிச்சாச்சு
'மார்க் ஆண்டனி' பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும், மூத்த நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடைபெற உள்ளது.
திரையுலகில், பிரபலங்கள் மற்றும் அவர்களின் வாரிசுகள் பற்றிய தகவல்கள் எது வெளியானாலும் அது காட்டு தீ போல் பரவி விடுகிறது. அந்த வகையில் தற்போது இளம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும், மூத்த நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடைபெற உள்ள தகவல் உறுதியாகியுள்ளது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் என்கிற அடையாளத்துடன், வாரிசு நடிகராக திரையுலகில் அறிமுகமானவர் பிரபு. மிக குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மனதில் நீக்காத இடத்தை பிடித்து... முன்னணி நடிகர் லிஸ்டில் இணைந்தார். சில்க் ஸ்மிதாவின் துவங்கி, குஷ்பூ, ரோஜா, மீனா, ஜோதிகா போன்ற பல நடிகைகள் இவருக்கு ஜோடியாக நடித்துள்ளனர்.
சமீப காலமாக குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார். இவருக்கு விக்ரம் என்கிற மகனும் ஐஸ்வர்யா என்கிற மகளும் உள்ளனர். விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். மேலும் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கு கடந்த 2009-ஆம் ஆண்டு அவரின் உறவினர் குணால் என்பவருடன் திருமணம் நடந்து முடித்து.
திருமணத்திற்கு பின்னர் கணவர் குணாலுடன் அமெரிக்காவில் செட்டில் ஆன ஐஸ்வர்யா, பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்து, தற்போது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும்... பிரபுவின் மகள் ஐஸ்வர்யா இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களுக்கு... டிசம்பர் 15-ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. பிரபு மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் குடும்பத்தினர்... திருமண பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சமீபத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான, 'மார்க் ஆண்டனி' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து தன்னுடைய அடுத்த படத்தை தல அஜித்தை வைத்து இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.