Shabana Aryan: சீரியல் நடிகை ஷபானா கர்ப்பமா? கையில் குழந்தையுடன் குட் நியூஸ் சொன்ன ஆர்யன்! குவியும் வாழ்த்து!
சீரியல் நடிகை ஷபானா கர்ப்பமாக இருக்கிறாரா? என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது நடிகர் ஆரியன் இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் போட்டுள்ள பதிவு.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில், ஒளிபரப்பான செம்பருத்தி தொடர் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் ஷபானா. அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்ற இந்த சீரியல், மூன்று வருடங்கள் ஒளிபரப்பான நிலையில்... கடந்த 2021-ஆம் ஆண்டு நிறைவடைந்தது. இந்த சீரியலில் 'செம்பருத்தி' என்கிற மிகவும் யதார்த்தமான ஹீரோயினாக நடித்திருந்தவர் ஷபானா.
இவர் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், 'பாக்கியலட்சுமி' தொடரில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த, ஆரியனை காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்த நிலையில், குடும்பத்தை மீறி இருவருமே நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணத்தில், ஆரியன் பெற்றோர் மட்டுமே கலந்து கொண்டதாகவும், ஷபானாவின் பெற்றோர் கலந்து கொள்ளவில்லை என கூறப்பட்டது.
Lokesh Kanagaraj: 5 படம் இயக்கிவிட்டேன்.. அதிரடியாக தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த லோகேஷ் கனகராஜ்..!
திருமணத்திற்கு பின்னர் இருவருமே தற்போது சீரியலில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் ஆரியன் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'மீனாட்சி பொண்ணுங்க' தொடரில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அதேபோல் ஷபானா சன் டிவியில், பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த இரு தொடர்களுக்குமே, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து விடுகிறது.
சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரை வாய்ப்புகளும் ஷபானாவுக்கு அவ்வபோது கதவை தட்டி வருகிறது. அந்த வகையில் விக்ரம் பிரபு நடிக்கும் திரைப்படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கஷபானா நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.
இரண்டாவது திருமணம்? குழந்தை விஷயத்தில் சமந்தா எடுத்துள்ள அதிரடி முடிவு! தீயாய் பரவும் தகவல்..!
இந்நிலையில் ஷபானாவின் கணவர் ஆரியன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில், போட்டுள்ள பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் "ஷபூ இங்க பாரு, சீக்கிரம் குட்டி ஷபுவ லான்ச் பண்றோம் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்து ரசிகர்கள் பலர், ஷபானா கர்ப்பமாக இருக்கிறாரா? என கேள்வி எழுப்பியுள்ளதுடன், விரைவில் குழந்தை பெற்றுக்கொள்ள தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்".
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D