இரண்டாவது திருமணம்? குழந்தை விஷயத்தில் சமந்தா எடுத்துள்ள அதிரடி முடிவு! தீயாய் பரவும் தகவல்..!
நடிகை சமந்தா குழந்தை விஷயத்தில் முக்கிய முடிவு எடுத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.
Samantha Ruth Prabhu
பல்லாவரத்து பெண்ணான நடிகை சமந்தா, இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'விண்ணை தாண்டி' வருவாயா படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், தெலுங்கில் திரிஷா ஏற்று நடித்திருந்த வேடத்தில் இவரும், சிம்பு கதாபாத்திரத்தில் நாக சைதன்யாவும் நடித்திருந்தனர். இந்த படம் இவர்கள் இருவருக்குமே திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.
இதை தொடர்ந்து, தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளிலுமே சமந்தா கவனம் செலுத்த துவங்கிய நிலையில், மிக குறுகிய காலத்தில், இரு மொழிகளிலும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக மாறினார். முன்னணி நடிகையாக இருக்கும் போதே தன்னுடைய நீண்டநாள் காதலரான நாகசைதன்யாவை கரம்பிடித்தார். இவர்களின் திருமணம் கோவாவில் மிக பிரமாண்டமாக நடந்தது.
திருமணத்திற்கு பின்னர், கணவர், குடும்பம், நடிப்பு என அனைத்தையுமே... மிகவும் நேர்த்தியாக பலரும் பொறாமை கொள்ளும் அளவுக்கு மெயின்டெயின் செய்து... ரசிகர்களையும் - பிரபலங்களையும் ஆச்சர்யப்பட வைத்த சமந்தா, திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரையுலகில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் கணவர் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் இடையே ஏற்பட்ட சிறு கருத்து வேறுபாடு இவர்கள் இருவரையும் விவாகரத்து வரை கொண்டு வந்தது.
கடந்த இரண்டு வருடத்திற்கு முன்னர், இருவரும் சட்டபூர்வமாக பிரிய உள்ளதை நடிகை சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் உறுதி செய்தனர். இவர்கள் பிரிவுக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும்... இதுவரை இருவருக்கு இடையே என்ன பிரச்சனை என்பதை, நாகசைதன்யா - சமந்தா இருவரும், வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
Samantha Ruth Prabhu
மேலும் இந்த பிரிவு இருவருக்குமே மிகப்பெரிய வலியை கொடுத்த நிலையில்... அதில் இருந்து மீண்டு தங்களின் கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்கள். விவாகரத்துக்கு பின்னர் சமந்தா, மயோசிட்டிஸ் பிரச்சனையால் அவதிப்பட நேர்ந்தது. இதற்காக கடந்த ஒரு வருடத்திற்கு மேல் சிகிச்சை எடுத்து வரும் இவர், கடந்த 6 மாதமாக முழு ஓய்வில் இருந்து சிகிச்சை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மீண்டும் படிப்பில் படு பிஸியாகியுள்ள சமந்தா பற்றி, பற்றி தெலுங்கு மீடியாக்களில் ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது. அதன்படி, சமந்தா... இரண்டாவது திருமணம் செய்து கொள்வது பற்றி, இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லையாம். எனினும் குழந்தைகள் என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும் என்கிற காரணத்தால் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க உள்ளாராம். ஆனால் இந்த தகவல் குறித்து தற்போது வரை எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் சமந்தா தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D