நீதா அம்பானி அணிந்திருந்த முகலாய பேரரசர் காலத்து வைர மோதிரம்.. ஆத்தி.. அதன் விலை இத்தனை கோடியா?
ஆனந்த் ராதிகா திருமண வரவேற்பில் நீதா அணிந்திருந்த அரிய வைர மோதிரம் பற்றிய வெளியாகி அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
Nita Ambani
தனது மகன் ஆனந்தின் திருமணத்தில் நீதா அம்பானி தனது நேர்த்தியான ஆடைத்தேர்வு, நகைகள் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அவரின் தனித்துவமான ஸ்டைலும், உயர்தர ஃபேஷனுக்கான நாட்டமும் அவரை ஒரு உலகளாவிய ஸ்டைல் ஐகானாக மாற்றியுள்ளது. ஆனந்த் அம்பானி திருமணத்தில் பல நிகழ்ச்சிகள் நடந்த நிலையில், திருமண வரவேற்பில் நீதா அம்பானி அணிந்திருந்த விலை உயர்ந்த புடவையும், நகைகளும் பேசு பொருளாக மாறியது.
Nita Ambani
புகழ்பெற்ற வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ராவால், மிகவும் நுட்பமான வெள்ளி வேலைப்பாடுகளால் உருவாக்கப்பட்ட பிங்க் நிற ப்ரோகேட் புடவையை அணிந்து நேர்த்தியான தோற்றத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும், அவரின் நகைகள் தான் அன்றைய தினம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. குறிப்பாக நீதா அணிந்திருந்த "மிரர் ஆஃப் பாரடைஸ்" வைர மோதிரம் பற்றிய தகவல்கள் வெளியாகி அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
வைரம், தங்க நகைகளால் செய்யப்பட்ட ட்ரெஸ் மூலம் கவனம் ஈர்த்த இஷா அம்பானி.. இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
Nita Ambani
இந்த அரிய செவ்வக-வெட்டு வைர மோதிரம் 52.58-காரட் கொண்டது இயற்கையின் கலைத்திறன் மற்றும் மனித கைவினைத்திறனுக்கு ஒரு சான்றாக இந்த மோதிரம் திகழ்கிறது. இந்தியாவின் புகழ்பெற்ற கோல்கொண்டா சுரங்கத்தில் இருந்து இந்த வைரம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மோதிரம் ஒரு காலத்தில் முகலாயப் பேரரசின் கருவூலத்தில் இருந்தது.
Nita Ambani
இந்த வைர மோதிரத்தின் மதிப்பு 6.5 மில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.54 கோடி ரூபாய் ஆகும். கோல்கொண்டா வைரங்கள் பெரும்பாலும் அனைவராலும் விரும்பப்படுகின்றன.. இந்திய வைரச் சுரங்கத்தின் சரியான தோற்றம் தெரியவில்லை என்றால், இது கிமு 400 இல் தொடங்கியதாக நம்பப்படுகிறது. ஆந்திர மாநிலம் கோல்கொண்டா வைரங்கள் வண்டல் பகுதி சுரங்கங்களில் இருந்து உருவானவை. குறிப்பாக கோல்கொண்டா மாவட்டம், தனது தனித்துவமான கற்களுக்காக புகழ்பெற்றது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உற்பத்தி நிறுத்தப்பட்டாலும், கோல்கொண்டா வைரங்களின் பாரம்பரியம் நிலைத்து நிற்கிறது.
Nita Ambani
நீதா அம்பானி இந்த வைர மோதிரத்தை அவர் அணிந்திருந்தது இது முதன்முறையல்ல. ஏற்கனவே ஆனந்த் மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் ஹஸ்தாக்ஷர் விழா மற்றும் என்எம்ஏசிசி பதவியேற்பு விழா ஆகியவற்றில் நீதா இந்த மோதிரத்தை அணிந்திருந்தார். எனவே, அம்பானி குடும்பத்தின் பாரம்பரியத்தில் இந்த வைரம் ஒரு சிறப்பு முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.
Nita Ambani
அம்பானியினி இளைய மகன் ஆனந்த் அம்பானியின் பிரம்மாண்ட திருமணம் உலகளவில் கவனம் ஈர்த்தது. மேலும் உலகின் மிகவும் விலை உயர்ந்த ஆடம்பர திருமணமாக இது கருதப்படுகிறது. ஆடம்பரமான அலங்காரங்கள் முதல் நேர்த்தியான உணவு வகைகள் வரை இந்த திருமணத்தின் ஒவ்வொரு விஷயமும் உண்மையிலேயே மறக்க முடியாத அனுபவத்தை உருவாக்கும் வகையில் உன்னிப்பாக திட்டமிடப்பட்டது. இந்த திருமணத்திற்கு அம்பானி குடும்பத்தினர் ரூ.5000 கோடி வரை செலவு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.