MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • வைரம், தங்க நகைகளால் செய்யப்பட்ட ட்ரெஸ் மூலம் கவனம் ஈர்த்த இஷா அம்பானி.. இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?

வைரம், தங்க நகைகளால் செய்யப்பட்ட ட்ரெஸ் மூலம் கவனம் ஈர்த்த இஷா அம்பானி.. இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?

ஆனந்தின் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டத்தில் இஷா அம்பானி அணிந்திருந்த லெஹங்கா மற்றும் அவர் அணிந்திருந்த பிளவுஸ் தொடர்பான புகைப்படங்கள் மீண்டும் வைரலாகி வருகிற

2 Min read
Author : Ramya s
Published : Jul 25 2024, 02:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Isha Ambani

Isha Ambani

தங்கள் வீட்டு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி அம்பானி வீட்டு பெண்கள் எப்போதுமே தங்கள் விலை உயர்ந்த நேரத்தியான உடைகள் மற்றும் நகைகள் மூலம் கவனம் ஈர்த்து வருகின்றனர்.

28
Isha Ambani

Isha Ambani

அந்த வகையில் சமீபத்தில் நடந்து முடிந்த அம்பானி வீட்டு திருமணத்தில் நீதா அம்பானி, இஷா அம்பானி, ஷ்லோகா மேத்தா, ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோர் அணிந்திருந்த ஆடம்பர உடைகள் மற்றும் நகைகள் பேசு பொருளாக மாறியது. 

38
Isha Ambani

Isha Ambani

முன்னதாக ஆனந்தின் ப்ரீ வெட்டிங் கொண்டாட்டத்தில் இஷா அம்பானி அணிந்திருந்த லெஹங்கா மற்றும் அவர் அணிந்திருந்த பிளவுஸ் தொடர்பான புகைப்படங்கள் மீண்டும் வைரலாகி வருகிறது. சிவப்பு நிற துணியில் நகைகளை பதித்து வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்ட லெஹங்கா, ஜாக்கெட் மற்றும் துப்பட்டா ஆகியவற்றை இஷா அணிந்திருந்தார்..

48
Isha Ambani

Isha Ambani

வைரம், மரகதம், மாணிக்கக் கற்கள் உள்ளிட்ட பல விலைமதிப்பற்ற கற்கள் அடங்கிய ஜடாவ் நகைகளால் செய்யப்பட்ட ஜாக்கெட்டை இஷா அணிந்திருந்தார். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வைரங்களை தனது ஜாக்கெட்டில் பதித்திருந்தார் இஷா.

நீதா அம்பானி அணிந்திருந்த ஒரே ஒரு வைர மோதிரத்தின் விலை ரூ. 54 கோடி; ஆமாம் பாஸ் நம்புங்க!!

58

ஆனால் இந்த ரத்தினங்களை தைக்க இயந்திரங்கள் பயன்படுத்தப்படவில்லை. இவை அனைத்துமே கையால் பதிக்கப்பட்டவை என்பது இந்த ஜாக்கெட்டின் கூடுதல் சிறப்பு. பல பிரபலங்களுக்கு ஆடைகளை வடிவமைக்கும் அபு ஜானி மற்றும் சந்தீப் கோஸ்லா ஆகிய ஆடை வடிவமைப்பாளர்கள் தான் இந்த ஆடையை வடிவமைத்துள்ளனர்.

68
Isha Ambani

Isha Ambani

தனது இந்த ஆடையை வடிவமைக்க தான் வைத்திருந்த ரூபி, வைரங்கள், மரகதங்கள் நகைகளை இஷா கொடுத்தாராம். , அவை தவிர குஜராத் மற்றும் ராஜஸ்தானில் இருந்தும் பல புதிய நகைகளை வாங்கி அவரின் ஆடையில் வடிவமைப்பாளர்கள் தைத்துள்ளனர்.

78
Isha Ambani

Isha Ambani

பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு, இந்த கலைப் படைப்பை உருவாக்கியதாக ஆடை வடிவமைப்பாளர்கள் கூறியுள்ளனர் .மேலும் நகைகளுடன் தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட ஜர்தோசி வேலைப்பாடுகளும் வெவ்வெறு தையல்களும் இந்த ஆடையில் பதிக்கப்பாட்டன.

அரிய பர்மா மாணிக்க நகையில் ஜொலித்த அம்பானியின் மருமகள்.. அதன் விலை இவ்வளவா?

 

88
Isha Ambani

Isha Ambani

நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இந்த ஆடையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இஷா. தனது திருமண நகைகளை அணிந்திருந்தார். கோடிக்கணக்கில் மதிப்புள்ள வைரத்தால் செய்யப்பட்ட பல அடுக்கு நகைகள் இஷாவின் அழகை மேலும் அதிகரித்தது

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
முகேஷ் அம்பானி

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved