அரிய பர்மா மாணிக்க நகையில் ஜொலித்த அம்பானியின் மருமகள்.. அதன் விலை இவ்வளவா?
தனது சங்கீத் நிகழ்ச்சியில் இயற்கையான பர்மா மாணிக்கங்களால் செய்யப்பட்ட நகைகளையும் ராதிகா அணிந்திருந்தார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Anant Radhika Wedding
ஆனந்த அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் கடந்த 12-ம் தேதி மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணம் உலகின் மிகவும் விலை உயர்ந்த ஆடம்பர திருமணமாக கருதப்படுகிறது. திருமணத்திற்கு முன்னதாக திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் மிகவும் சிறப்பாக நடைபெற்றன. இந்த ப்ரீ வெட்டிங் கொண்டாட்டங்களின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Radhika Merchant wear Burma Ruby
தனது சங்கீத் விழாவின் போது மணிஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த தங்க நிற லெஹங்காவை ராதிகா அணிந்திருந்தார். மேலும் அப்போது இயற்கையான பர்மா மாணிக்கங்களால் அதாவது ரூபியால் செய்யப்பட்ட நகைகளையும் ராதிகா அணிந்திருந்தார். இந்த நகைகள் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Radhika Merchant wear Burma Ruby
இந்த நகை உலகப்புகழ்பெற்ற பர்மாவின் மாணிக்கங்களால் செய்யப்பட்டவை ஆகும்.. இந்த மாணிக்கங்கள் வடக்கு பர்மாவில் உள்ள மோகோக் பள்ளத்தாக்கு மற்றும் கிழக்கு மாண்டலேயில் உள்ள மோங்-ஹ்சு ஆகியவற்றில் காணப்படுகின்றன.
Radhika Merchant wear Burma Ruby
வரலாற்று ரீதியாக, பர்மிய மாணிக்கங்கள் செல்வம், சக்தி மற்றும் பாதுகாப்பின் சின்னமாக கருதப்படுகின்றன. இதன் காரணமாகவே இந்த நகைகள் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்பவதாக கூறப்படுகிறது.
Radhika Merchant wear Burma Ruby
எனினும் ராதிகா மெர்ச்சண்ட் அணிந்திருந்த நகையின் விலை எவ்வளவு என்பது சரியாக தெரியவில்லை. ஆனால் அதன் விலை கோடிக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
Radhika Merchant wear Burma Ruby
எனினும் ராதிகா மெர்ச்சன்ட் தனது சங்கீத் விழாவிற்கு அணிந்திருந்த பர்மிய ரூபி செட் அவரின் மாமியார் நீதா அம்பானிக்கு சொந்தமானது. 2018 ஆம் ஆண்டு தனது மகள் இஷா அம்பானியின் சங்கீத் நிகழ்ச்சியின் போது நீதா அம்பானி முதன்முதலில் இந்த ரூபி நகைகளை அணிந்திருந்தார்
Nita Ambani And Radhika Merchant
இதற்கு முன் அம்பானியின் மகள் இஷா அம்பானி தனது தாயின் நகைகளை அணிந்துள்ளார். தற்போது தனது நகைகளை மருமகள் ராதிகாவுக்கும் நீதா வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது