Asianet News TamilAsianet News Tamil

த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்கவில்லை! மரணித்துவிடு என கூறியது தவறாகிவிட்டது! மன்சூர் அலிகான் வைத்த ட்விஸ்ட்!

நடிகை த்ரிஷா குறித்து, மன்சூர் அலிகான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவதூறாக பேசிய சர்ச்சைக்கு  மன்னிப்பு கேட்டு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக நினைத்த நிலையில், தற்போது நான் த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்கவில்லை, 'மரணித்துவிடு' என்று கூறியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக மீண்டும் புது பிரச்சனையை கிளப்பி உள்ளார்.
 

I have not apologized to Trisha Mansoor Ali khan who stirred controversy again mma
Author
First Published Nov 28, 2023, 6:50 PM IST | Last Updated Nov 28, 2023, 6:54 PM IST

நடிகர் மன்சூர் அலிகான், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'லியோ' திரைப்படத்தில் இருதயராஜ் என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் அவர் கமிட்டாகும்போது வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு கூறியதும், 90-களில் தன்னுடைய படங்களில் இடம்பெறும் ரேப் காட்சி, இந்த படத்திலும் இடம்பெறும் என நினைத்தேன். ஆனால் த்ரிஷாவை படக்குழு தன்னுடைய கண்ணில் கூட காட்டவில்லை என, சமீபத்தில் கொடுத்த பேட்டியில் மன்சூர் அலிகான் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து த்ரிஷா மன்சூர் அலிகான் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் ட்வீட் போட்டு கோபத்தை வெளிப்படுத்தியதோடு, இன்று எந்த படத்திலும் மன்சூர் அலிகானுடன் இணைந்து நடிக்க மாட்டேன் என கூறி இருந்தார். இதை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், குஷ்பூ, பாஜக தலைவர் வானதி சீனிவாசன், போன்ற பலர் தொடர்ந்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.

I have not apologized to Trisha Mansoor Ali khan who stirred controversy again mma

ஞானவேல் பொய் குற்றச்சாட்டுக்கு பின்னல்.. சிவகுமாரும் அவரின் பிள்ளைகளும் உள்ளார்களா? கரு பழனியப்பன் பகீர்!

மேலும் இந்த விவகாரம் குறித்து காவல்துறை, நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையமும் கோரிக்கை வைத்தது. இதைத்தொடர்ந்து சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில், மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. சம்மனை ஏற்றுக்கொண்ட மன்சூர் அலிகான், ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் ஆஜராகி சுமார் ஒன்றரை மணி நேரம் போலீசாரின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் போலீசாரின் விசாரணை முடிந்த மறுநாளே தன்னுடைய தரப்பில் இருந்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். அந்த அறிக்கையில் கூறியிருந்ததாவது, "ஒரு வாரமாக நடந்த கத்தியின்றி ரத்தமின்றி போரில் நான் வெற்றி? பெற்றுவிட்டேன்!

I have not apologized to Trisha Mansoor Ali khan who stirred controversy again mma

பல பேர் முன்பு... அந்த இடத்தில் தடவி பாலியல் தொல்லை! 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியல் நடிகையின் ஷாக் தகவல்!

எனக்காக வாதிட்ட தலைவர்கள், நடிகர்கள், ஊடகவியலாளர்கள் யாவோர்க்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். எதிர்த்து என்னை கண்டித்த மானுடர்களுக்கும் பணிவான வணக்கங்கள். கலிங்கத்துப் போர் முடிந்தது. லட்சக்கணக்காணோர் மாண்டு கிடக்க, சாம்ராட் அசோகனின் இதயத்தில் ரத்தம் வடிந்து, அஹிம்சையை தழுவினான். ஆம். மனசாட்சியே இறைவன். 

காவல் அதிகாரி அம்மையார் திரிஷாவின் மனது வருத்தப்பட்டிருக்கிறது எனச் சொல்ல, 'ஐயஹோ எனக்கும் வருத்தம் தான்' என வந்துவிட்டேன். யதார்த்த நிலை! சட்டம் வென்று வெளியே வந்தால், மீண்டும் கோரப்பசியுடன் கோழிக் குஞ்சை கவ்வ வரும் வல்லூறுகளாக ஊடகம் துரத்துகிறது.! ஜனநாயகத்தின் நான்காவது தூண்,. மணிப்பூர், ஹாத்ரஸ் பெண் பல்கீஸ் பானு, நீட் அனிதாக்கள், வாச்சாத்தி வன் கொடுமைகள் நித்தம் மதக்கலவர வன்கொடுமைகளை சாட்டையடியாக கேள்வி கேட்க மறுக்கிறது. 

எனது இளமைக்காலம் யாவும் திரைத்துறையில் இழந்து விட்டேன். திமிங்கலமாக உலா வந்தாலும், பாத்திரங்கள் சிறு மீன்களாகத்தான் அமைந்தது. இனி வரும் நாட்களாவது ஆக்கபூர்வமாக உழைக்க இறைவா சக்தியை கொடு!. என் மக்கள், மலடான பளபளக்கும் ரசாயண உரமேற்றப்பட்ட காய்கறிகளை உண்டு, விவசாயிகள் வீணர்களாக ஆக்கப்பட்டு, விளை நிலங்கள் கரிக்கட்டைகளாக மாறும். 

I have not apologized to Trisha Mansoor Ali khan who stirred controversy again mma

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

கனிமங்கள், மலை, ஆறு காணாடிக்கப்பட்டு, வேலையற்றவர்களாய் நிற்கிறோம். குழந்தைகள் கசடறகற்க, சூரியன் மறையும் முன் குடும்பம் காக்க மாங்குமாங்கு என்று உழைப்போம். மாதத்தில் 10 நாள் கடுமையாக உழைத்தால் தான் கரண்ட் பில் கட்ட முடியும். மீதி நாள் GST, ST, டோல்கேட், பெட்ரோல் கேஸ், ஸ்கூல் பீஸ், மளிகை வாங்க என, ஒன்றும் மிஞ்சமாட்டேங்கிறது. இன்னும் கடுமையாக ஏதாவது சம்பளத்திற்கு வேலை செய்தால்தான் நாம் அதானிக்கு கப்பம் கட்ட முடியும் அதானிந்தியா மார்பில் தவலும் குழந்தையுடன், இளமங்கை இளவரசியை கட்டிலில் விட்டுச்செல்ல நாம் புத்தனில்லை. ஆம்!

பெண்ணிலிருந்து தான் மனிதன் பிறக்கிறான். தாயின் காலடியில் சொர்க்கம். தாய்க்கு சேவை செய் என்றர் நபிகளார் அவர்கள். பெண்மை புனிதம். காரணத்தோடு தான் ஆண்மையை அழியுங்கள் என்றார் பெரியார். எனை ஈன்ற சபூரா மாள் பாம்புக்கடி, பூரான், தேள் கடித்து வருவோர்க்கு 8 வேளை தொழுது, ஓதி, ஊதி, கிராம்பு நீர் கொடுத்து, நற்கிருபைகள் செய்தவர். 

I have not apologized to Trisha Mansoor Ali khan who stirred controversy again mma

சினிமா பார்க்கவிடாது 10, ஆம் வகுப்புவரை வளர்த்தவர். இனிமேலும் இம்மண்ணின் மீட்சிக்கு, சகோதரத்துவத்துடன் உழைக்க அருள் புரிவாய் இறைவா!! இறையச்சமே நம் குழந்தைகளின் நல்வாழ்க்கையை அருளும்! எனது சக திரைநாயகி திரிஷாவே, என்னை மன்னித்துவிடு! இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக!! ஆமீன். நடிகர் மன்சூர் அலிகான்". என தெரிவித்திருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அக்ஷயா மற்றும் பிராவோ வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்நிலையில் இந்த அறிக்கையில் மன்னித்துவிடு என நான் கூறவே இல்லை. மரணித்துவிடு என கூறியதை பி.ஆர்.ஓ தவறாக புரிந்து கொண்டு மன்னித்துவிடு என எழுதிவிட்டார். போனில் சொன்னதால் இந்த தவறு நடந்து விட்டது. என கூறி புதிய குண்டை தூக்கி போட்டுள்ளார். எந்த பிரச்னை எங்கு போய் முடியும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios