- Home
- Gallery
- பல பேர் முன்பு... அந்த இடத்தில் தடவி பாலியல் தொல்லை! 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியல் நடிகையின் ஷாக் தகவல்!
பல பேர் முன்பு... அந்த இடத்தில் தடவி பாலியல் தொல்லை! 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியல் நடிகையின் ஷாக் தகவல்!
சமீப காலமாக, பல பிரபலங்கள் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த பாலியல் சீண்டல்கள் குறித்த தகவல்களை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியல் நடிகை ஷாக்கிங் தகவலை வெளியிட்டுள்ளார்.

சமீப காலமாக, பல பிரபலங்கள் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த பாலியல் சீண்டல்கள் குறித்த தகவல்களை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியல் நடிகை ஷாக்கிங் தகவலை வெளியிட்டுள்ளார்.
சினிமா துறையில் உள்ள பிரபலங்கள் பலர் வெளிப்படையாக தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் மற்றும், காஸ்டிங் கோச் குறித்த விஷயங்களை வெளிப்படையாக கூறி வருகிறார்கள்.
இது போன்ற பாலியல் தொல்லைகள், சினிமா துறையை சார்ந்தவர்களால் அதிகம் பேசப்பட்டாலும், அனைத்து துறையிலும் இது போன்ற பிரச்சனைகள் இருந்து தான் உள்ளது. அதேபோல் பல பெண்கள் பேருந்துகளில் செல்லும்போதும், வெளியிடங்களுக்கு செல்லும் போதும் சில மோசமான ஆண்களால் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாக்க படுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
அந்த மாதிரி ஒரு விஷயத்தை தான் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரிஹானா தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார். இவர் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பு செவிலியராக மருத்துவமனையில் பணியாற்றியவர். அப்போது தினமும் தன்னுடைய வேலைக்கு பேருந்தில் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அக்ஷயா மற்றும் பிராவோ வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
ஒருமுறை பேருந்தில் இவர் செல்லும்போது, இவரின் பின்னால் நின்ற ஒருவர் அவரின் பின்பக்கத்தை தடவிக் கொண்டே வந்தாராம். முடிந்தவரை அதை தடுப்பதற்காக அவரிடம் இருந்து விலகி... விலகி... சென்றபோதும் அவர் விடாமல் தொந்தரவு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த ரிஹானா அனைவர் மும்பும் மிகவும் சத்தமாக, 'நீ ஒரு பக்கமாக தடவுவதால் எரிகிறது, இந்த பக்கமும் வந்து தடவிக் கொள் என கூறி தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்'.
அப்போது அந்த பேருந்தில் இருந்த அனைவருமே, அந்த மோசமான நபரை பார்த்து விட்டு திரும்பிக் கொண்டார்களே தவிர... யாரும் அந்த நபரை தட்டி கேட்கவில்லை என்றும். நான் சத்தம் போடுவதை பார்த்துவிட்டு அங்கு வந்த நடத்துனரிடம் விஷயத்தை கூறிய பின்னர், அந்த நபரை பேருந்தில் இருந்து இறக்கி விட்டதாக தெரிவித்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதன் மூலம் பெண்களுக்கு பல சமயங்களில் சில வக்கிர புத்தி கொண்ட ஆண்கள் இது போன்ற பிரச்சனைகளை கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றனர்,அதனை பெண்கள் தான் சாமர்த்தியமாகவும் தைரியமாகவும் எதிர்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். ரிஹானா தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க சீரியல், சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஆனந்த ராகம், பாண்டியன் ஸ்டோர் 2, சீரியல் போன்றவற்றில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.