Mirnaa: என்ன சிம்ரன் இதெல்லாம்? மேலையும் ஓப்பன்... கீழையும் ஓப்பன்... நடுவுல சிப்! மிரட்டலான மேலாடையை மிர்னா!
சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாத நடிகையாக பார்க்கப்படும், ஜெயிலர் பட நடிகை மிர்னா மேனனின் லேட்டஸ்ட் ஹாட் போட்ஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
கேரளத்து பைக்கிலியான மிர்னா, பிறந்து - வளர்ந்தது எல்லாம் இடுக்கி மாவட்டத்தில் தான். இவரின் சொந்த பெயர் ஆதிரா சந்தோஷ். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவர் எப்படியும் நடிகையாக வேண்டும் என, ஆரம்பத்தில் மலையாள படங்களில் வாய்ப்பு தேட துவங்கினார். சினிமாவிற்காக தன்னுடைய பெயரை சாய்னா என மாற்றி கொண்டு மலையாள திரையுலகில் சில படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்த இவர், சீரியலில் வில்லி வேடத்தில் நடித்து கலக்கினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அக்ஷயா மற்றும் பிராவோ வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
மலையாள திரையுலகில், சில காதல் சர்ச்சையில் சிக்கி பெயர் டேமேஜ் ஆனதால்... கேரள நடிகைகளுக்கு வாய்ப்புகளை வாரி வழங்கும் தமிழ் சினிமா மீது இவரது கவனம் சென்றது. தமிழில் அதிதி மேனன் என்று பெயரை மாற்றி கொண்டு, 'நெடுநல்வாடை' படத்தில் அறிமுகமானார். பின்னர் இயக்குனர் தன்னிடம் அத்துமீறியதாக இவர் கூறிய புகார் தமிழ் சினிமாவில் புயலை கிளப்பியது. பின்னர் இந்த படத்தை, அஞ்சலி நாயரை வைத்து எடுத்து முடித்தார் அந்த இயக்குனர்.
'பட்டதாரி' என்ற படத்தில், இளம் நடிகர் விஜய் விஷவாவுக்கு, ஜோடியாக நடித்தார் அதிதி. இந்த படத்தில் நடிக்கும் போது... இருவருக்குள்ளும் காதல் துளிர் விட, இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். இதை தொடர்ந்து பிரபல இசையமைப்பாளரின் அசிஸ்டென்ட்டுடன் இரவோடு இரவாக ஓட்டம் பிடித்ததாக விஜய் விஸ்வா அனைத்து ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் இவர்கள் இருவருக்குமான விவாகரத்து சமாச்சாரமும் ஒருபக்கம் நீதி மன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இப்படி பல சர்ச்சைகளுக்கு இடையே தான், அதிதி மீண்டும் மிர்னா மேனனாக தன்னுடைய பெயரை மாற்றி கொண்டு தமிழில் தீவிர பட வேட்டை நடத்தி வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகளாக ஜெயிலர் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்து கொண்ட இவர், அடுத்தடுத்த படங்களை கிளாமர் போட்டோஸ் வெளியிட்டு கைப்பற்ற முயன்று வருகிறார். அந்த வகையில்... தற்போது மேலையும் ஓப்பனாக... கீழையும் ஓப்பனாக விட்டு கவர்ச்சி குதூகலம் செய்யும் கிராப் டாப்புடன் வெளியிட்டுள்ள, போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.