இளம் ஹீரோவுக்கு அடித்த ஜாக்பாட்! லோகேஷ் கனகராஜ் நிறுவனத்துடன் கை கோர்த்த முதல் நாயகன் யார் தெரியுமா?
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ஜி ஸ்குவாட் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி உள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், தற்போது இவருடைய நிறுவனம் வழங்கும் முதல் படத்தின் ஹீரோ குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
குறும்பட இயக்குனராக இருந்து, பின்னர் தமிழ் சினிமாவில் 'மாநகரம்' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் லோகேஷ் கனகராஜ். இதைத்தொடர் 'கைதி', 'மாஸ்டர்', 'விக்ரம்', 'லியோ' என தொடர்ந்து முன்னணி நடிகர்களை வைத்து அடுத்தடுத்த சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.
Lokesh Kanagaraj with Vijay
சமீபத்தில் இவர் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், ஒரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற போதிலும், மற்றொரு தரப்பினர் கலவையான விமர்சனங்களை தெரிவித்தனர். ஆனால் வசூலில் சுமார் 550 கோடிக்கு மேல் வாரி குவித்தது.
கடந்த வாரம் Netflix OTT தளத்திலும் இப்படம் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 10 படங்களை மட்டுமே இயக்குவேன் என அறிவித்துள்ள நிலையில், திடீர் என தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் பற்றிய தகவலை நேற்று வெளியிட்டார். இளம் இயக்குனர்களின் கிரியேட்டிவிட்டியை ஊக்குவிக்கும் விதத்தில் தயாரிப்பு நிறுவனத்தின் துவங்கி உள்ளதாக லோகேஷ் அறிவித்த நிலையில், இவர் நிறுவனம் வெளியிடும் முதல் படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ரியல் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில், உரியடி படத்தின் மூலம், தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்களை திரும்பி பார்க்கவைத்த, இளம் இயக்குனரும் - நடிகருமான விஜயகுமார் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை மாலை 6 மணி அளவில் வெளியாக உள்ளதாக புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த படத்தை இயக்குனர் அப்பாஸ் இயக்க உள்ளார். கோவிந்த் வசந்தா இசையில், லியோன் பிரிட்டோ இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜீ ஸ்குவாட் நிறுவனம் இப்படத்தை வழங்குவதாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ள தகவல் தற்போது வைரலாகி வருகிறது வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.