Robo Shankar: 22-ஆம் ஆண்டு திருமண நாள்.. ரஜினி - கமலை சந்தித்து வாழ்த்து பெற்ற ரோபோ ஷங்கர் குடும்பம்!
நடிகர் ரோபோ ஷங்கர், இன்று தன்னுடைய 22 -ஆவது திருமண நாளை கொண்டாடி வரும் நிலையில், தன்னுடைய குடும்பத்துடன் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இந்த போட்டோஸ் வைரலாகி வருகிறது.
ஊர் திருவிழாக்களில், மேடை நாடகங்களில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்த ரோபோ ஷங்கர், தன்னுடைய திறமையை 'அசத்தப்போவது யாரு', 'கலக்கப்போவது யாரு', போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மூலம் வெளிப்படுத்த துவங்கினார்.
இந்த நிகழ்ச்சி இவரை பட்டி... தொட்டி... எங்கும் கொண்டு சேர்ந்த நிலையில், பட வாய்ப்புகளும் குவிய துவங்கியது. ரோபோ ஷங்கர் மனைவி ஒரு டான்ஸர் என்பதால், அவரும் தொடர்ந்து சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலமானார். எனவே இந்த நட்சத்திர ஜோடிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
இவர்களை தொடர்ந்து ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவும், 'பிகில்' படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிச்சியமான முகமாக மாறினார். கடந்த ஆண்டு கார்த்தி - அதிதி ஷங்கர் நடிப்பில் வெளியான 'விருமன்' படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
சமீபத்தில், மஞ்சள் காமாலை நோய் காரணமாக, உடல் மெலிந்து... சாவில் விளிம்பில் இருந்து மீண்டு வந்த ரோபோ ஷங்கர். விரைவில் தன்னுடைய மகள் திருமணம் நடைபெற உள்ளதால்... திருமண பணிகளிலும், மீண்டும் நடிப்பு, ஆணழகன் போட்டி போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறார்.
ரோபோ ஷங்கரின் மிகப்பெரிய வெற்றிக்கு மிக முக்கிய காரணம், அவரின் மனைவி ப்ரியங்கா தான். இதனை ரோபோ ஷங்கர் பல பேட்டிகளில் கூட தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ரோபோ ஷங்கரின்... 22-ஆம் ஆண்டு திருமண நாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, ரோபோ ஷங்கர் தன்னுடைய மனைவி, மகள், வருங்கால மாப்பிள்ளையுடன் ரஜினி - கமல்ஹாசனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
டிஆர்பி-யில் டாப் டக்கர் சாதனை படைத்த பிக்பாஸ் 7-வது சீசன்... எல்லாத்துக்கும் காரணம் அவர்தானாம்
இதுகுறித்த போட்டோஸ், தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் தங்கள் இருவரின் புகைப்படத்தில்... ரஜினி மற்றும் கமல்ஹாசனின் கையொப்பத்தை வாங்கி வைத்துள்ளனர். இதை இந்த ஆண்டு திருமண நாளுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதமாக ரோபோ ஷங்கர் உணர்வதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D