MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • தமிழ் பிரபலங்களை தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னட பிரபலங்களுக்கு திருமண அழைப்பிதழ் வைக்கும் வரலட்சுமி!

தமிழ் பிரபலங்களை தொடர்ந்து தெலுங்கு மற்றும் கன்னட பிரபலங்களுக்கு திருமண அழைப்பிதழ் வைக்கும் வரலட்சுமி!

நடிகை வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் நெருங்கி கொண்டே இருக்கும் நிலையில், தற்போது தெலுங்கு மற்றும் கன்னட நடிகர்களுக்கு பத்திரிக்கை வைப்பதில் பிசியாகி உள்ளார். 

1 Min read
manimegalai a
Published : Jun 13 2024, 05:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

நடிகை வரலட்சுமி சரத்குமார் இன்னும் ஓராண்டில் 40 வயதை தொட உள்ள நிலையில், ஒருவழியாக சமீபத்தில் தன்னுடைய திருமணம் குறித்த நற்செய்தியை அறிவித்தார். அதாவது விஷாலுடனான பிரேக்கப்புக்கு பின்னர் திருமணமே வேண்டாம் என இவர் முடிவு செய்து, தொடர்ந்து நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

25

இப்படி இருந்தவர் மனதில் மீண்டும் காதல் மலரை பூக்க வைத்தது,  இவருடைய 14 வருட நண்பர்... நிக்கோலாய் சச்தேவ். வரலட்சுமி மீது தனக்கு இருக்கும் விருப்பத்தை வரலட்சுமியின் பெற்றோரிடமே கூறி அனுமதி பெற்று, பின்னர் வரலட்சுமியிடம் புரபோஸ் செய்ய, வருவும் அவரின் காதலை ஏற்று கொண்டார். 

சுடரால் தடைபடும் மனோகரின் பூஜை! மீண்டும் உள்ளே வந்த இந்து - நினைத்தேன் வந்தாய் இன்றைய அப்டேட்!

35

இரு வீட்டு பெற்றோரின் சம்மதத்தோடு, கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னர், வரு - நிக்கோலாய் திருமண நிச்சயதார்த்தம் மிகவும் எளிமையாக... மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்தது. 

45

இதை தொடர்ந்து வரு - நிக்கோலாய் திருமணத்தை தாய்லாந்தில் ஜூலை 2-ஆம் தேதி நடத்த குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். ஹல்தி நிகழ்ச்சி, திருமணத்திற்கு முதல் நாள் சென்னை தாஜ் ஹோட்டலில் நடக்க உள்ளதாகவும், திருமணத்திற்க்கு பின்னர் கிராண்ட் ரிசப்ஷன் லீலா பேலஸில் நடைபெற உள்ளது.

3 முறை அப்படி ஆனது! குடியை நிறுத்தல.. இறக்கும் தருவாயில் அம்மா மஞ்சுளா கூறிய ரகசியம்? வனிதா போட்டுடைத்த உண்மை!

55

திருமணத்திற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், குடும்பத்தினர் திருமண பத்திரிக்கை வைப்பதில் பிசியாகி உள்ளனர். அந்த வகையில் கோலிவுட் திரையுலக நட்சத்திரங்களான ரஜினி, கமல், உள்ளிட்ட நடிகர்கள், இயக்குனர் ஆகியோர்க்கு ஏற்கனவே அழைப்பு விடுத்த வரு தற்போது தெலுங்கு மற்றும் கன்னட நடிகர்களுக்கு பத்திரிக்கை வைத்து வருகிறார். நடிகர் சுதீப், ரவி தேஜா, இயக்குனர் வம்சி ஆகியோருக்கு அழைப்பு விடுத்த போது எடுக்கப்பட்ட போட்டோஸ் வைரலாகி வருகிறது. 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
வரலட்சுமி சரத்குமார்
ரஜினிகாந்த்
கமல்ஹாசன்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved