- Home
- Gallery
- சுடரால் தடைபடும் மனோகரின் பூஜை! மீண்டும் உள்ளே வந்த இந்து - நினைத்தேன் வந்தாய் இன்றைய அப்டேட்!
சுடரால் தடைபடும் மனோகரின் பூஜை! மீண்டும் உள்ளே வந்த இந்து - நினைத்தேன் வந்தாய் இன்றைய அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மனோகரி இந்துவை அழிப்பதற்கான பூஜையை தொடங்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது சாமியார் இந்துவின் ரத்த சொந்தம் யாரும் இருக்க கூடாது என்று சொன்னதால் முதலில் மனோகரி குழந்தைகளையும் கணவல்லியையும் வெளியே அனுப்பி வைக்கிறாள். இதையடுத்து எழிலுக்கு உடம்பு சரியில்லை என்பதால் அவனை நானே பார்த்து கொள்கிறேன் என்று சொல்கிறாள்.
அடுத்து செல்வியிடம் நான் பூஜையை தொடங்குறேன், யாரையும் வர விடாத என்று சொல்லி பூஜையை தொடங்க உள்ளே சுடர் எழிலை பக்கத்தில் இருந்து கவனித்து கொள்கிறாள். அதன் பிறகு மனோகரி பூஜையை செய்து மஞ்சளை பிடித்து வைத்து மேலே பானையில் இருந்து தண்ணீர் சொட்டுவது போல் செட்டப் செய்து பூஜையை முடிக்கிறாள்.
இந்து உள்ளே வர முடியாமல் தவித்தபடி இருக்க ஹாஸ்டல் வார்டன் எழிலுக்கு போன் செய்தபடி இருக்க எழில் போனை எடுக்காத நிலையில் மனோகரிக்கு போன் செய்து இந்துவோட குடும்பம் கிடைச்சிட்டாங்க, அவங்க தங்கச்சி மற்றும் அப்பாவோட போட்டோ கிடைச்சிருக்கு, எழில் சாருக்கு அனுப்பவா என்று கேட்க மனோகரி தனக்கு அனுப்பி வைக்க சொல்கிறாள். மேலும் நேரில் வந்து அந்த போட்டோவை காட்ட சொல்லி விட்டு ரவுடிக்கு போன் செய்து ஹாஸ்டல் வார்டனை போட்டு தள்ள சொல்கிறாள்.
சுடர் எழிலுக்காக ஜூஸ் போட போக அப்போது அவளது விரலை வெட்டி கொள்ள அவளது ரத்தம் மஞ்சள் மீது பட்டு மனோகரின் பூஜை நாசமாகிறது. மஞ்சள் கருப்பாக மாற இந்துவின் ஆத்மா மீண்டும் வீட்டிற்குள் நுழைந்து விடுகிறது. சுடர் எழிலை கவனித்து கொள்வதை இந்து மறைந்து இருந்து பார்க்கிறாள். செல்வியும் மனோகரியும் மஞ்சள் கருப்பாக மாறியதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.