- Home
- Gallery
- கடல் தாண்டிச் சென்று... லண்டனில் ஜாம் ஜாம்னு மகளின் ரிஷப்ஷனை நடத்திய அனிதா விஜயகுமார் - போட்டோஸ் இதோ
கடல் தாண்டிச் சென்று... லண்டனில் ஜாம் ஜாம்னு மகளின் ரிஷப்ஷனை நடத்திய அனிதா விஜயகுமார் - போட்டோஸ் இதோ
அனிதா விஜயகுமாரின் மகளும், நடிகர் விஜயகுமாரின் பேத்தியுமான தியாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி லண்டனில் கோலாகலமாக நடைபெற்றது.

Anitha Vijayakumar Daughter Diya
நடிகர் விஜயகுமாரின் வாரிசுகளில் சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்தவர் அனிதா தான். மருத்துவம் படித்து டாக்டரான அனிதா கோகுல் என்பவரை காதலித்து கரம்பிடித்தார். இந்த ஜோடிக்கு தியா, ஸ்ரீஜெய் என இரு பிள்ளைகள் உள்ளனர்.
Diya Dillan
அனிதா மற்றும் அவரது கணவரைப் போல் அவரது மகன், மகள் இருவருமே மருத்துவம் படித்து டாக்டராகிவிட்டனர். இருவருமே தற்போது மருத்துவராக பணியாற்றி வருகின்றனர். அதிலும் அனிதாவின் மகள் தியா லண்டனில் பணியாற்றி வருகிறார்.
Anitha Vijayakumar Daughter Wedding Reception in London
அனிதாவின் மகள் தியாவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. அவர் தன்னுடன் படித்த தில்லான் என்பவரையே காதலித்து குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் சென்னையில் நடைபெற்றது.
Anitha Vijayakumar Family
அனிதாவின் மகள் தியாவின் திருமணத்தில் ரஜினிகாந்த் உள்பட ஏராளமான திரையுலக நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர். தியாவுக்கு திருமணம் முடிந்து ஐந்து மாதங்கள் ஆகியும் இன்னும் கொண்டாட்டங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... மும்பையில் 6 ஃபிளாட்களை வாங்கிய அபிஷேக் பச்சன்.. இத்தனை கோடியா? ஷாக் ஆகாம படிங்க..
Vijayakumar in Diya wedding Reception
தியாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை தற்போது லண்டனிலும் நடத்தி இருக்கிறார் அனிதா விஜயகுமார். அதில் அவருடன் படித்த மற்றும் பணியாற்றிய நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
Diya wedding reception Photos
தியாவின் லண்டன் ரிஷப்சன் பல கோடி செலவில் பிரம்மாண்டமாக நடந்திருக்கிறது. இதில் நடிகர் அருண் விஜய் மற்றும் விஜயகுமார் ஆகியோர் குடும்பத்தினரோடு கலந்துகொண்டுள்ளனர்.
Anitha Vijayakumar Daughter wedding reception photos
சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை லண்டனில் நடத்தி அசத்தி இருக்கிறார் அனிதா விஜயகுமார். அந்த நிகழ்ச்சியின் போது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... Diya : இவங்க டாக்டரா இல்ல ஆக்டரா? போட்டோஷூட்டில் சினிமா ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் விஜயகுமார் பேத்தி தியா