Asianet News TamilAsianet News Tamil

மும்பையில் 6 ஃபிளாட்களை வாங்கிய அபிஷேக் பச்சன்.. இத்தனை கோடியா? ஷாக் ஆகாம படிங்க..

நடிகர் அபிஷேக் பச்சன் மும்பையின் போரிவலி பகுதியில் ரூ.15.42 கோடிக்கு 6 அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியுள்ளதாதக தகவல் வெளியாகி உள்ளது.

Abhishek Bachchan Buys Six Flats in Mumbai And The Whopping Price Will SHOCK You Rya
Author
First Published Jun 20, 2024, 9:44 AM IST

பழம்பெரும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். தனது 50 ஆண்டுகளுக்கும் மேலான திரை வாழ்க்கையில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பிக் பி என்று அழைக்கப்படும் அமிதாப் தனது நடிப்பு திறமைக்காக தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளையும் வாங்கி உள்ளார். நடிகர் என்பதை தாண்டி, திரைப்பட தயாரிப்பாளர், பின்னணி பாடகர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகங்களை கொண்டவர் அமிதாப். 

திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் என பல வழிகளிலும் அமிதாப் பச்சனுக்கு வருமானம் வருகிறது. இவை தவிர ரியல் எஸ்டேட், பல்வேறு முதலீடுகளில் இருந்தும் அமிதாப் சம்பாதிக்கிறார். நாட்டின் பணக்கார நடிகர்களில் ஒருவராக இருக்கும் அமிதாப் பச்சனின் சொத்து மதிப்பு ரூ. 3100 கோடி என்று கூறப்படுகிறது. மும்பையில் ஆடம்பர பங்களாக்கள், சொகுசு கார்கள், பிரைவேட் என ராஜ வாழ்க்கையை அமிதாப் வாழ்ந்து வருகிறார்.

இதனிடையே சக நடிகையான ஜெயா பச்சனை அமிதாப் திருமணம் செய்து கொண்டார். ஜெயா பச்சன் - அமிதாப் பச்சன் தம்பதிக்கு ஸ்வேதா பச்சன், அபிஷேக் பச்சன் என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

ஸ்வேதா டெல்லியில் உள்ள கபூர் குடும்பத்தின் பேரனான தொழிலதிபர் நிகில் நந்தாவை மணந்தார், இவருக்கு நவ்யா நவேலி மற்றும் அகஸ்தியா நந்தா என்ற இரு குழந்தைகள் உள்ளனர், நடிகர் அபிஷேக் பச்சன் நடிகையும் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராயை மணந்தார், இந்த தம்பதிக்கு ஆராத்யா பச்சன் என்ற மகள் உள்ளார்.

இந்த நிலையில் நடிகர் அபிஷேக் பச்சன் மும்பையின் போரிவலி பகுதியில் ரூ.15.42 கோடிக்கு 6 அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியுள்ளதாதக தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 4,894 சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த குடியிருப்புகள், ஒரு சதுர அடிக்கு ரூ.31,498 என்ற விலையில் விற்கப்பட்டது. விற்பனை ஒப்பந்தம் மே 5, 2024 அன்று கையொப்பமிடப்பட்டது. போரிவலி கிழக்கில் மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் (WEH) அமைந்துள்ள உயரமான கட்டிடத்தின் 57 வது மாடியில் இந்த ஆறு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன, மேலும் 10 கார் பார்க்கிங் இடங்களும் உள்ளன.

இயக்குனர் வெற்றிமாறனுக்கு இந்த கெட்ட பழக்கங்கள் எல்லாம் இருந்துச்சா.. அவரே சொன்ன பதில்!

முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் அபிஷேக் பச்சனனின் தந்தையும் நடிகருமான அமிதாப் பச்சன் மகாராஷ்டிராவில் அலிபாக்கில் ரூ.10 கோடி மதிப்புள்ள நிலத்தை வாங்கினார். ஷாருக்கான், தீபிகா படுகோன்-ரன்வீர் சிங் மற்றும் அனுஷ்கா சர்மா போன்ற பிரபலங்களும் அலிபாக்கில் சொத்துக்களை வைத்திருக்கின்றனர். இந்த சூழலில் இந்த பட்டியலில் அமிதாப் இணைந்தார்.

இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரியில், அயோத்தியில் அமிதாப் ரூ.14.5 கோடிக்கு நிலம் வாங்கியதாக தகவல் வெளியானது. 10,000 சதுர அடி பரப்பளவில் 14.5 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அவர் வாங்கியதாக கூறப்படுகிறது. அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு சற்று முன்பு அவர் நிலம் வாங்கினார்.

Deepika Padukone: கர்ப்பமாக இருக்கும் வயிற்றுடன் 'கல்கி 2898 AD' பட விழாவில் கலந்து கொண்ட தீபிகா படுகோன்!

கடந்த ஆண்டு, அமிதாப் பச்சன் புறநகர் ஜூஹூவில் உள்ள தனது பங்களாவை தனது மகள் ஸ்வேதா நந்தாவுக்கு பரிசளித்தார். ‘பிரதீக்ஷா’ என்ற பங்களாவின் மதிப்பு ரூ.50.63 கோடிக்கு மேல். இந்த பங்களாவை தான் அமிதாப் முதன் முதலில் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios