Deepika Padukone: கர்ப்பமாக இருக்கும் வயிற்றுடன் 'கல்கி 2898 AD' பட விழாவில் கலந்து கொண்ட தீபிகா படுகோன்!
கல்கி 2898 AD படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி மும்பையில் இன்று நடந்த நிலையில், இதில் நடிகை தீபிகா படுகோன் பேபி பம்ப் தெரியும் டைட் உடையில் கலந்து கொண்டு அரச வைத்தார். இதுகுறித்த சில போட்டோஸ் இதோ.
Deepika Padukone
பிரபாஸ் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள சயின்ஸ் ஃபிக்சன் திரைப்படம் தான் கல்கி 2898 AD.
Deepika Padukone
இந்த படத்தில், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி உட்பட இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.
Deepika Padukone
இந்த படத்தை, நடிகை கீர்த்தி சுரேஷை வைத்து 'மகாநடி' படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். இந்த படத்தை வைஜெயந்தி மூவீஸ் தயாரித்துள்ளது.
இப்படம் 2024 ஜூன் 27ஆம் தேதி, உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. எனவே தொடர்ந்து படக்குழுவினர் தீவிர புரோமோஷன் பணியில் இறங்கி உள்ளனர். அதே போல் கடந்த வாரம் வெளியான இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் சில தினங்களுக்கு முன்பு வெளியான பைரவா ஆன்ந்தம் பாடல் போன்றவை நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் இன்று மும்பையில் நடந்தது. அதில் அமிதாப் பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன் உட்பட ஒட்டுமொத்த படக்குழுவும் கலந்து கொண்டது.
Deepika Padukone
நடிகை தீபிகா படுகோன் கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதற்க்கு முன்னர் சில நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டாலும் எதிரிலும் தன்னுடைய பேபி பெல்லி தெரியும் அளவிலான உடை அவர் அணியவில்லை.
ஆனால் இந்த படத்தின் நிகழ்ச்சிக்கு வருகை தந்த இவர்... கருப்பு நிற டைட் ட்ரெஸ் அணிந்து கர்ப்பமாக இருக்கும் வயிறு தெரியும் விதத்தில் உடை அணிந்திருந்தார். இவரை படக்குழுவினரும் மிகவும் அக்கறையுடன் கவனித்து கொண்டது, தற்போது வெளியாகி வரும் வீடியோ மூலம் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.