- Home
- Gallery
- அனிதா விஜயகுமார் திருமணத்தில் முறை மாமனாக சீர்செய்த சத்யராஜ்! கணவரோடு வந்த ஸ்ரீதேவி! வெட்டிங் போட்டோஸ்!
அனிதா விஜயகுமார் திருமணத்தில் முறை மாமனாக சீர்செய்த சத்யராஜ்! கணவரோடு வந்த ஸ்ரீதேவி! வெட்டிங் போட்டோஸ்!
அனிதா விஜயகுமாரின் தன்னுடைய திருமணத்தில் கிலோ கணக்கில் நகை அணிந்து, ஒரு தேவதை போல் இருக்கிறார். பலரும் பார்த்திடாத த்ரோ பேக் போட்டோஸ் இதோ..

Anitha Vijayakumar Wedding Pics
தமிழ் திரையுலகில் சுமார் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் பழம்பெரும் நடிகர் விஜயகுமார். தமிழ் மட்டும் இன்றி, பிற தென்னிந்திய மொழிகளிலும்... ஹிந்தியில் கூட சில படங்களில் நடித்துள்ளார். ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகனாக மாறியவர்.
Anitha Vijayakumar Wedding Pics
அழகும், திறமையும் இருந்தும் ஏனோ இவரால்... அப்போதைய முன்னணி நடிகர்களான சிவாஜி, கமல், முத்துராமன் போன்ற நடிகர்களின் இடத்தை பிடிக்கமுடியாமல் போனது. எனவே பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடிக்க துவங்கிய விஜயகுமார்... ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 10 படங்களுக்கு மிகாமல் நடித்தார்.
Anitha Vijayakumar Wedding Pics
வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல், ஏராளமான சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கிறார் விஜயகுமார். இவர் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான சில வருடத்திலேயே தன்னுடைய உறவினர் பெண்ணான முத்துக்கன்னு என்பவரை கடந்த 1969 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
Anitha Vijayakumar Wedding Pics
பின்னர் மஞ்சுளாவுடன் நடித்தபோது இருவருக்கும் இடையே காதல் மலர... தன்னுடைய மனைவி சம்மதத்துடனே, நடிகை மஞ்சுளாவையும் 1976ல் திருமணம் செய்து கொண்டார். விஜயகுமாருக்கு - முத்துக்கனுக்கு மூலம், அருண் விஜய், அனிதா , கவிதா என இரண்டு பெண் பிள்ளைகளும், ஒரே ஒரு ஆண் பிள்ளையும் உள்ளது.
'முதல்வன்' படத்தில் மனிஷா கொய்ராலாவுக்கு பதில் நடிக்க இருந்த ஹீரோயின் யார் தெரியுமா? காரணம் இதுதான்!
Anitha Vijayakumar Wedding Pics
அதே போல் விஜயகுமாருக்கு, மஞ்சுளா மூலம் வனிதா, ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி என மூன்று மகள்கள் பிறந்தனர். குடும்ப பிரச்சனை காரணமாக ஒட்டு மொத்த குடும்பமும் வனிதாவை மட்டும் ஒதுக்கி விட்ட நிலையில், மற்ற 5 பேருமே மிகவும் ஒற்றுமையான சகோதர - சகோதரிகளாக உள்ளனர். அருண் விஜய்யின் மனைவி ஆர்த்தியும் தன்னுடைய 4 நாத்தனார்களையும் அனுசரித்து செல்லும் பெண்ணாகவே உள்ளார்.
Anitha Vijayakumar Wedding Pics
குறிப்பாக எந்த ஒரு கொண்டாட்டம் என்றாலும்... விஜயக்குமார் குடும்பம் ஒன்றாக இணைந்து விடுவார்கள். இவர்கள் குடும்பம் சேர்ந்தாலே அது ஒரு கல்யாண வீடு போல் களைகட்டி விடும். அதிலும் இவர்கள் குடும்பத்திலேயே திருமணம் என்றால் சொல்லவா வேண்டும். அப்படித்தான் தியாவின் திருமணத்தை விஜயகுமாரின் மகளான அனிதா 6 மாதத்திற்கு முன்பே பிளான் செய்து அமர்க்கள படுத்தினார்.
விவாகரத்துக்கு பின் கிடைத்த சுதந்திரம்! நீண்ட இடைவெளிக்கு பின்னர் இமானுடன் கூட்டணி வைத்த சைந்தவி!
Anitha Vijayakumar Wedding Pics
மகளின் திருமணத்தையே இப்படி கோலாகலமாக செல்லபிரேட் செய்த அனிதா... தன்னுடைய திருமணத்தில் எப்படி இருந்தார் என்பதை நீங்களே பாருங்கள். கிலோ கணக்கில் தங்க நகைகள், காஸ்டலியான பட்டு புடவை என, ஒரு தேவதை போல் உள்ளார்.
Anitha Vijayakumar Wedding Pics
அனிதாவின் திருமணத்தை, மஞ்சுளாவும் முன் நின்று நடத்தியது இந்த புகைப்படங்களை பார்க்கும் போதே தெரிகிறது. அதே போல், இவரின் திருமணத்தில் முறை மாமன் போல் வந்து சீர் கொடுத்து அசத்தி இருக்கிறார் சத்யராஜ்.
Anitha Vijayakumar Wedding Pics
பிரபல நடிகை ஸ்ரீதேவி, தன்னுடைய குடும்ப திருமணமாகவே இதை நினைத்து... மும்பையில் இருந்து தன்னுடைய கணவருடன் வந்து அனிதா மற்றும் அவரின் கணவர் கோகுல கிருஷ்ணனை வாழ்த்தியுள்ளார். அனிதா விஜயகுமார் ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் இவரின் கணவரும் ஒரு மருத்துவர் தான் இருவருமே காதலித்து, பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
Anitha Vijayakumar Wedding Pics
இவர்கள் இருவருமே மருத்துவர் என்பதாலோ என்னவோ... அனிதாவின் மகள் தியாவும், மகனும் ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பலரும் பார்த்திடாத அனிதா விஜயகுமாரின் திருமண புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இவரின் திருமணத்தில் ஏராளமான கோலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
இளையராஜா ஆசை நிறைவேறல! நானும் லிவிங்ஸ்டனும் பிரிய காரணம் 2 பெண்கள் தான்! ஜி.எம்.குமார் ஓப்பன் டாக்!