- Home
- Gallery
- விவாகரத்துக்கு பின் கிடைத்த சுதந்திரம்! நீண்ட இடைவெளிக்கு பின்னர் இமானுடன் கூட்டணி வைத்த சைந்தவி!
விவாகரத்துக்கு பின் கிடைத்த சுதந்திரம்! நீண்ட இடைவெளிக்கு பின்னர் இமானுடன் கூட்டணி வைத்த சைந்தவி!
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின்னர், இசையமைப்பாளர் இமான் இசையில் சைந்தவி பாடிய பாடல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

saindhavi
தமிழ் சினிமாவில் இளம் நடிகராகவும், முன்னணி இசையமைப்பாளராகவும் இருந்து வருபவர் ஜிவி பிரகாஷ். தன்னுடைய பள்ளி காலத்தில் இருந்தே காதலித்து வந்த பிரபல பாடகி, சைந்தவியை கடந்த 2013-ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் கரம் பிடித்தார். ஆனால் இவர்களின் காதல் திருமணம் முடிவுக்கு வர உள்ளதாக, கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னர் ஜிவி மற்றும் சைந்தவி அறிவித்தது அவர்களின் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது.
கடந்த ஒரு வருடமாகவே, இருவரும் பிரிந்து வாழ்ந்ததாக கூறப்பட்ட நிலையில்... இந்த விவகாரம் லீக் ஆக துவங்கி விட்டதால், வேறு வழி இன்றி சைந்தவியும் ஜீவியும் விவாகரத்து அறிக்கை வெளியிட்டு விவாகரத்தை உறுதி செய்தனர்.
இளையராஜா ஆசை நிறைவேறல! நானும் லிவிங்ஸ்டனும் பிரிய காரணம் 2 பெண்கள் தான்! ஜி.எம்.குமார் ஓப்பன் டாக்!
இவர்களின் விவாகரத்துக்கு காரணம் சைந்தவியின் அம்மா என்று ஒரு தரப்பும், ஜிவி பிரகாஷ் திரைப்படங்களில் நடிகைகளுடன் நெருக்கம் காட்டி நடிப்பதும், இளம் நடிகை ஒருவருடன் ஏற்பட்ட நட்பும்தான் காரணம் என கூறப்பட்டது. ஆனால் இருவருமே இப்படி வெளியான காரணங்களில் துளியும் உண்மை இல்லை என மீண்டும் தெளிவு படுத்தும் விதமாக எக்ஸ் தளத்தில் கூறி இருந்தனர்.
திருமணத்துக்கு பின்னர், குறிப்பாக ஜிவி பிரகாஷ் இசையிலேயே அதிகமான பாடல்களை பாடி வந்த சைந்தவி, ஜீவியை விட்டு பிரிந்த பின்னர் இசை நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக செயல்பட்டார். மேலும் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர். பிரபல இசையமைப்பாளர் இமானுடன் கூட்டணி சேர்ந்து ஒரு பாடலையும் பாடியுள்ளார். இது குறித்த தகவலை சைந்தவி வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
சைந்தவி இதற்கு முன்னர் 'ஏ பி சி டி' என்றும் படத்தில் இமானுடன் 2005-ஆம் ஆண்டு பணியாற்றி உள்ளார். அப்போது தான் பள்ளியில் படித்து வந்ததாகவும் இந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து நீண்ட இடைவேளைக்கு பின்னர், பேபி அண்ட் பேபி எனும் படத்தில் தாலாட்டு பாடல் ஒன்றை பாடியுள்ளார். இந்த பாடல் கண்டிப்பாக தன்னுடைய இசையில் வெளியாகும் மிக முக்கிய பாடலாக இருக்கும் என இமான் கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
GV prakash kumar
ஏற்கனவே தங்களுடைய விவாகரத்து அறிக்கையில் திருமணத்திற்கு பிறகு, தங்களின் சுதந்திரம் தடைபடுவதால் தான் விவாகரத்து முடிவை எடுத்ததாக சைந்தவி மற்றும் ஜிவி பிரகாஷ் கூறிய நிலையில்... தற்போது சுதந்திரமாக தங்களின் ஆசை படி இருவரும் பணியாற்ற துவங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.