- Home
- Gallery
- 'முதல்வன்' படத்தில் மனிஷா கொய்ராலாவுக்கு பதில் நடிக்க இருந்த ஹீரோயின் யார் தெரியுமா? காரணம் இதுதான்!
'முதல்வன்' படத்தில் மனிஷா கொய்ராலாவுக்கு பதில் நடிக்க இருந்த ஹீரோயின் யார் தெரியுமா? காரணம் இதுதான்!
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் எஸ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான, 'முதல்வன்' படத்தில், மனிஷா கொய்ராலாவுக்கு பதில் ஹீரோயினாக நடிக்க இருந்த நடிகை யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

கோலிவுட் திரையுலகில் பிரமாண்ட இயக்குனர் என பெயர் எடுத்தவர் இயக்குனர் ஷங்கர். இவரின் டைட்டில் பெயருக்கு ஏற்றாப்போல் பல பிரமிக்க வைக்கும் காட்சிகள் இவரின் படத்தில் இடம்பெறும். கடந்த 1993-ஆம் ஆண்டு அர்ஜுன் நடித்த ஜென்டில் மேன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் தன்னுடைய முதல் படத்திலேயே, பல முன்னணி இயக்குனர்களையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் வெற்றியை பதிவு செய்தார்.
இதை தொடர்ந்து, பிரபு தேவா - நக்மா நடித்த 'காதலன்', கமல்ஹாசன் நடித்த 'இந்தியன்', பிரஷாந்த் - ஐஸ்வர்யா ராய் நடித்த ஜீன்ஸ் போன்ற அடுத்தடுத்த ஹிட் படங்களை இயக்கினார். இதுவரை தோல்வி படங்களையே கொடுக்காத இயக்குனர் என பெயர் எடுத்த, ஷங்கர்... தன்னுடைய 5-ஆவது படமாக இயக்கிய படம் தான் 'முதல்வன்'.
நடிகர் அர்ஜுன் ஹீரோவாக நடித்திருந்த இப்படம் 1999 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மனிஷா கொய்ராலா ஹீரோயினாக நடித்திருந்த இப்படத்தில் , ரகுவரன், மணிவண்ணன், வடிவேலு, லைலா, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கே.வி.ஆனந்த் படத்தொகுப்பு செய்திருந்த இந்த படத்திற்கு, ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். இப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில், நடிகர் அர்ஜுனினின் திரையுலக வாழ்க்கையில் மிகவும் முக்கிய திரைப்படமாகவும் அமைந்தது.
mudhalvan
இந்த படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்கும் ஜாக்பார்ட் வாய்ப்பு ஒன்று பிரபல நடிகைக்கு கிடைத்த நிலையில், மீண்டும் அதே நடிகருடன் நடிக்க விருப்பம் இல்லை என கூறி இந்த வாய்ப்பை தவற விட்டுள்ளார் பிரபல நடிகை.
விவாகரத்துக்கு பின் கிடைத்த சுதந்திரம்! நீண்ட இடைவெளிக்கு பின்னர் இமானுடன் கூட்டணி வைத்த சைந்தவி!
அவர் வேறு யாரும் அல்ல, கண் அழகி மீனா தான். மனிஷா கொய்ராலாவை இப்படத்தில் கமிட் செய்வதற்கு முன்னர், அர்ஜுனுக்கு ஜோடியாக ஷங்கர் நடிக்கவைக்க அணுகியவர் மீனாவை தானாம். ஆனால் இப்படம் உருவாகும் அதே சமயத்தில் தான் மீனா அர்ஜூனுடன் 'ரிதம்' படத்திலும் நடித்து வந்துள்ளார்.
Meena
எனவே மீண்டும் அவருடன் நடித்தால்... ஒரே மாதிரி முகங்களை பார்த்தது போல் இருக்கும் என எண்ணி இந்த வாய்ப்பை வேண்டாம் என கூறியுள்ளார். அதன் பின்னரே இப்படத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்த பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலாவை நடிக்க வைத்தாராம் ஷங்கர். மீனா நடித்திருந்தாலும் நல்லா தான் இருக்கும் என்பதே பலரது எண்ணமாக இருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
இளையராஜா ஆசை நிறைவேறல! நானும் லிவிங்ஸ்டனும் பிரிய காரணம் 2 பெண்கள் தான்! ஜி.எம்.குமார் ஓப்பன் டாக்!