- Home
- Gallery
- Schools Holiday: விடாமல் வெளுத்து வாங்கும் கனமழை.. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்கள்!
Schools Holiday: விடாமல் வெளுத்து வாங்கும் கனமழை.. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்கள்!
தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், பந்தலூர் தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Heavy Rain
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Tamilnadu Heavy Rain
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க: Tamilnadu Heavy Rain: இந்த 6 மாவட்டங்களில் அலறவிடப்போகுதாம் கனமழை.. வானிலை மையம் அலர்ட்..!
Schools Holiday
அதன்படி கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள வால்பாறை பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார். அதேபோல், கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், பந்தலூர் தாலுகா பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அருணா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.