MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • அதிதி ஷங்கருக்கு போட்டியா? வனிதா விஜயகுமார் மகன் ஸ்ரீஹரிக்கு ஜோடியாக அறிமுகமாகும் பிரபல இயக்குனரின் மகள்!

அதிதி ஷங்கருக்கு போட்டியா? வனிதா விஜயகுமார் மகன் ஸ்ரீஹரிக்கு ஜோடியாக அறிமுகமாகும் பிரபல இயக்குனரின் மகள்!

நடிகை வனிதா விஜயகுமாரின் மகன் ஸ்ரீஹரி விரைவில் தமிழ் சினிமாவில், முன்னணி இயக்குனர் இயக்கத்தில் நடிக்க உள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

2 Min read
manimegalai a
Published : Jun 11 2024, 12:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Vanitha son Srihari

Vanitha son Srihari

தமிழ் சினிமாவில் கலை குடும்பமாக பார்க்கப்படும், பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார் தளபதி விஜய்க்கு ஜோடியாக 'சந்திரலேகா' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். எண்ணி நான்கு படங்களே நடித்துவிட்டு, தன்னுடன் நாடகத்தில் ஒன்றாக இணைந்து பணியாற்றிய ஆகாஷ் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
 

29
Vanitha Vijayakumar

Vanitha Vijayakumar

ஆகாஷ் - வனிதா காதலின் அடையாளமாக ஸ்ரீஹரி - ஜோதிகா என இரண்டு குழந்தைகள் பிறந்தனர். ஜோவிகா பிறந்த கையேடு ஆகாஷை விட்டு விவாகரத்து பெற்ற வனிதா, ஆனந்த் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். அவர் மூலம் வனிதாவுக்கு ஜெயனிதா என்கிற மகள் ஒருவரும் உள்ளார். ஆனந்திடம் இருந்தும்,  சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்ற வனிதா விஜயகுமார், கடந்த சில வருடங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு சித்தி ராதிகாவுடன் சென்று திருமண அழைப்பிதழ் கொடுத்த வரலட்சுமி! வைரல் போட்டோஸ்!
 

39

இந்த திருமணம் சில மாதங்களிலேயே முடிவுக்கு வந்த நிலையில்...  இது அங்கீகரிக்கப்பட்ட திருமணம் இல்லை என்றும், இருவரும் லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் மட்டுமே வாழ்ந்ததாக வனிதா விளக்கம் கொடுத்திருந்தார். கடந்த ஆண்டு பீட்டர் பால் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

49

தற்போது மீண்டும் வனிதா சினிமாவில் படு பிஸியாக மாறி உள்ள நிலையில், பொத்திக் ஒன்றையும் வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மகள் ஜோவிகா சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வருவது மட்டும் இன்றி, நடிகர் பார்த்திபனிடம் துணை இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

Ammu Abirami: முட்டி கிச்சு லவ்வு... பிரபலத்துடனான காதலை கன்ஃபாம் செய்த அம்மு அபிராமி! வைரலாகும் புகைப்படம்!

59

தங்கை நடிகையாக அறிமுகமாவதற்கு முன்பே அண்ணன் ஸ்ரீஹரி ஹீரோவாக அறிமுகமாகும் படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  சிறுவயதிலேயே வணிதாவிடம் இருந்து பிரிந்து சென்ற ஸ்ரீஹரி அவருடைய தந்தையிடம் தான் இத்தனை வருடங்களாக வளர்ந்து வருகிறார். அண்மைக்காலமாக ஷார்ட் பிலிம், ஆல்பம் போன்றவற்றில் அவ்வபோது தலைகாட்டி வரும் ஸ்ரீஹரி தொடர்ந்து சினிமாவில் அறிமுகமாக வாய்ப்பு தேடி வந்துள்ளார்.

69

இந்நிலையில் இவர் நடிக்கும் முதல் படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி ஸ்ரீஹரி இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா, கும்கி, செம்பு, போன்ற படங்களின் வரிசையில் இப்படமும் எதார்த்தமான கதைக்களத்தில் உருவாக உள்ளதாகவும், இந்த படத்திற்காக பயிற்சி எடுப்பதற்காக வெளிநாட்டுக்கு ஸ்ரீஹரி சென்று வந்துள்ளார்.

Suresh Gopi: அமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறேனா? உண்மை இதுதான்... சுரேஷ் கோபி அதிரடி விளக்கம்!
 

79

இந்த படத்தில் கதாநாயகியாக பிரபு சாலமனின் மகள் ஹசேல் ஷைனி நடிக்கிறாராம். இவரும் கடந்த சில வருடங்களாகவே சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் தற்போது திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்த படத்தில் சிங்கம் ஒன்று ஹீரோவுடனே பயணிக்கும் விதத்தில் நடிக்க உள்ளதாம்.

89

ஸ்ரீ ஹரியின் அப்பா, ஒரு தொழிலதிபர் என்பதை தாண்டி ஒரு நடிகர் என்பதால், அவருடைய மகன் நடிப்பில் ஆர்வம் காட்டியதால் தன்னுடைய மகனை ஒரு சிறந்த இயக்குனரின் படத்தில் அறிமுகப்படுத்த வேண்டும் என காத்திருந்த நிலையில், இந்த வாய்ப்பு குறித்து அவருக்கு தெரியவந்துள்ளது. பின்னர் ஆடிஷனில் கலந்து கொண்ட ஸ்ரீஹரி இந்த படத்தின் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாகவே அமையவே... இப்படத்தில் இவரையே பிரபு சாலமன் ஹீரோவாக மாற்றியுள்ளார்.

Actor Arrested: நான்கு வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த 'திரிஷ்யம்' பட நடிகர் POCSO சட்டத்தில் கைது!

99

இயக்குனர் சங்கரின் மகள் அதிதி, யாரும் எதிர்பாராத விதமாக திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி கலக்கி கொண்டிருக்கும் நிலையில், அதிதிக்கு போட்டியாக ஹசேல் ஷைனி மின்னுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved