- Home
- Gallery
- என்ன பொசுக்குனு இப்படி பண்ணிடாங்க! புயலை கிளப்பிய ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி - அப்போ விவாகரத்து கன்பார்மா?
என்ன பொசுக்குனு இப்படி பண்ணிடாங்க! புயலை கிளப்பிய ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி - அப்போ விவாகரத்து கன்பார்மா?
விவாகரத்து சர்ச்சை கொளுந்துவிட்டு எரியும் நிலையில், இன்ஸ்டாவில் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி செய்த செயலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Jayam Ravi wife Aarti
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் கடந்த 2009-ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஆரவ், அயான் என இரண்டு மகன்களும் உள்ளனர். இதில் ஜெயம் ரவியின் மூத்த மகன் ஆரவ் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். அதுவும் ஜெயம் ரவியின் மகனாகவே டிக் டிக் டிக் என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார் ஆரவ். அப்படம் வெற்றியும் பெற்றது.
Jayam Ravi and Aarti
சினிமாவில் 25 படங்களுக்கு மேல் நடித்து வெற்றி நாயகனாக வலம் வரும் ஜெயம் ரவி, அவரது மனைவி ஆர்த்தியை காதலித்து தான் திருமணம் செய்துகொண்டார். ஆர்த்தியின் தாயார் சுஜாதா விஜயகுமார் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக வலம் வருகிறார். அவர் நடிகர் ஜெயம் ரவி நடித்த பூமி, சைரன் போன்ற படங்களை தயாரித்து உள்ளார். தற்போது நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் பிரதர், ஜீனி போன்ற திரைப்படங்கள் தயாராகி வருகிறது.
இதையும் படியுங்கள்... நடிகர் இளவரசு மகன் திருமணம்.. கார்த்தி முதல் SK வரை படையெடுத்து வந்து வாழ்த்திய கோலிவுட் பிரபலங்களின் போட்டோஸ்
Jayam Ravi And Aarti Ravi Divorce Rumours
இப்படி பிசியான நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி, தன்னுடைய காதல் மனைவியை விவாகரத்து செய்து பிரிய உள்ளதாக கடந்த வாரம் தகவல் ஒன்று வெளியாகி கோலிவுட்டில் புயலை கிளப்பியது. இதையடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயம் படத்தில் இடம்பெறும், காதல் எனும் வார்த்தை, அது வார்த்தை அல்ல வாழ்க்கை என்கிற லிரிக்கை பதிவிட்டு இருந்தார் ஆர்த்தி, தன்னைப்பற்றிய விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளதாக கருதினார்.
Aarti Ravi Removes Jayam Ravi Photos From Instagram
ஆனால் அதே இன்ஸ்டாகிராமில் தற்போது ஆர்த்தி செய்துள்ள செயல், விவகாரத்து விவகாரத்தை மேலும் பூதாகரமாக்கி உள்ளது. தன்னுடைய கணவர் ஜெயம் ரவி உடன் எடுத்த புகைப்படங்களை அனைத்தையும் இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கி இருக்கிறார் ஆர்த்தி. இதற்கு முன்னர் விவகாரத்து செய்த நடிகைகள் பலர் இதுபோன்று செய்துள்ளதால், ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதியின் விவாகரத்து கன்பார்மா என்கிற சர்ச்சை எழுந்துள்ளது.
இதையும் படியுங்கள்... கண்மணியை தொடர்ந்து கதீஜா உடன் ஜோடி... பாலிவுட்டில் காத்துவாக்குல ரெண்டு காதல் செய்யும் ஷாருக்கான்..!