- Home
- Gallery
- Ammu Abirami: முட்டி கிச்சு லவ்வு... பிரபலத்துடனான காதலை கன்ஃபாம் செய்த அம்மு அபிராமி! வைரலாகும் புகைப்படம்!
Ammu Abirami: முட்டி கிச்சு லவ்வு... பிரபலத்துடனான காதலை கன்ஃபாம் செய்த அம்மு அபிராமி! வைரலாகும் புகைப்படம்!
நடிகை அம்மு அபிராமி விஜய் டிவி பிரபலத்தின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி, தன்னுடைய காதலையும் ரசிகர்களுக்கு வெளிப்படுத்தும்படி கேப்ஷன் போட்டுள்ளார். இதை தொடர்ந்து இந்த காதல் ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தளபதி விஜய் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான, 'பைரவா' திரைப்படத்தில் கூட்டத்தோடு கூட்டமாக வந்து செல்லும் மருத்துவ கல்லூரி மாணவி வேடத்தில் நடித்தவர் தான் அம்மு அபிராமி. மெல்ல மெல்ல தன்னை சினிமாவில் நிலைநிறுத்திக்கொள்ளும் படியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கினார்.
அந்த வகையில், நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படத்தில், கார்த்தியின் தங்கையாக நடித்த கதாபாத்திரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அதே 'ராட்சசன்' படத்தில் பள்ளி மாணவியாக அம்மு அபிராமி நடித்த ரோல் பட்டி தொட்டி எங்கும் இவரை கவனிக்க வைத்தது.
மேலும் 'அசுரன்' படத்தில், தனுஷின் முன்னாள் காதலி... மாரியம்மா கதாபாத்திரத்தில் பொருந்தி நடித்திருந்தார். இப்படம் அம்மு அபிராமிக்கு மிகப்பெரிய திருப்புமுனையையும் ஏற்படுத்தியது. நடித்தார் வெங்கடேஷ் இப்படத்தில் ரீமேக்கில் கூட.. அம்மு அபிராமி தான் இந்த ரோலில் நடிக்க வேண்டும் என அடம்பிடித்து அம்முவை கமிட் செய்தார் என கூறப்பட்டது.
ammu abirami
தற்போது தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளிலும், பிஸியாக நடிகையாக நடித்து வரும் அம்மு அபிராமி சில படங்களில் கதாநாயகியாக நடித்தாலும், பல படங்களில் கதைக்கும், கதாபாத்திரத்திற்கும், முக்கியத்துவம் கொடுக்கும் அழுத்தமான கேரக்டரை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஹாட்ஸ்பாட், கண்ணகி போன்ற படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
வெள்ளித்திரையில் மட்டும் இன்றி சின்னத்திரை ரசிகர்களுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அம்மு அபிராமி. இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இயக்குனர் பார்த்திபன் மணியை காதலிப்பதாக ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், தற்போது... அந்த தகவலை மணியின் பிறந்தநாளில் கன்ஃபாம் செய்துள்ளார்.
பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி பிறந்ததற்கு நன்றி, வாழ்க்கையில் வந்ததற்கு நன்றி என கூறியுள்ளார். இதன்மூலம் இதுவரை ரகசியமாக இருந்த காதலை, அம்மு அபிராமி வெளிப்படையாக தெரியப்படுத்தியுள்ளார். மணியுடன் எடுத்து கொண்ட சில புகைப்படங்களையும் அம்மு அபிராமி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.