MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Suresh Gopi: அமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறேனா? உண்மை இதுதான்... சுரேஷ் கோபி அதிரடி விளக்கம்!

Suresh Gopi: அமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறேனா? உண்மை இதுதான்... சுரேஷ் கோபி அதிரடி விளக்கம்!

மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நடிகர் சுரேஷ் கோபி, அமைச்சர் பதவியில் இருந்து விலக உள்ளதாக சமூக வலைதளத்தில் ஒரு தகவல் காட்டு தீ போல் பரவி வந்த நிலையில், இது குறித்து தற்போது அவரே விளக்கம் கொடுத்துள்ளார். 

2 Min read
Author : manimegalai a
Published : Jun 10 2024, 04:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Suresh Gopi

Suresh Gopi

நம் இந்தியாவின் பிரதமரை தேர்வு செய்வதற்கான பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், அதன் முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி வெளியானது. இந்த தேர்தலில் எந்த கட்சியும் தங்களுடைய பெரும்பான்மையை நிரூபிக்காத நிலையில், கூட்டணி கட்சிகளின் உதவியுடன் பாஜக மத்தியில் ஆட்சியை அமைத்துள்ளது. 

25

நேற்று நம் நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்று கொண்டார். அவருடன் சேர்ந்து 73 பேர் இணை அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். இதில் கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற நடிகர் சுரேஷ் கோபியும் ஒருவர்.

Anna: கடத்தப்பட்ட பரணி! வாயை விட்டு சிக்கிய சௌந்தரபாண்டி... சண்முகம் செய்யப் போவது என்ன? அண்ணா சீரியல் அப்டேட்
 

35

சுரேஷ் கோபியின் மூலம் கேரளாவிலும் கால் பதித்துள்ளது பாஜக. எனவே சுரேஷ் கோபிக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இவர் நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட நிலையில், இன்று காலை முதலே சமூக வலைதளத்தில் ஒரு தகவல் தீயாக பரவி வந்தது.
 

45

அதாவது சுரேஷ் கோபி அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க கமிட் ஆகி உள்ளதால், அமைச்சர் பதவி தனக்கு வேண்டாம் என தெரிவித்துள்ளதாகவும்... விரைவில் அவரை அமைச்சர் பதவியில் இருந்து பாஜக விடுவிக்கும் என கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது சுரேஷ் கோபி இது குறித்து தன்னுடைய விளக்கம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

Karthigai Deepam: அபிராமியை அலறவிட்ட போன் கால்.! கார்த்திக் கொடுத்த வாக்கு - கார்த்திகை தீபம் அப்டேட்!
 

55

அதில் மோடி அரசின் அமைச்சர்கள் குழுவில் இருந்து நான் விலகப்போவதாக சில ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இது முற்றிலும் தவறானது. பிரதமர் தலைமையில் நரேந்திர மோடி ஜி கேரளாவிலும் வளர்ச்சி மற்றும் செழிப்பை கொண்டுவர நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் அமைச்சர் பதவியில் இருந்து சுரேஷ்கோபி விலகவில்லை வெளியாகும் தகவலில் உண்மை இல்லை என்பது தெளிவாகிறது.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கேரளா
பிஜேபி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved