MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • TTF vasan : மனசு வலிக்குது.. குக் வித் கோமாளில இதெல்லாமா பண்றாங்க- புட்டு புட்டு வைத்த TTFன் காதலி ஷாலின் சோயா

TTF vasan : மனசு வலிக்குது.. குக் வித் கோமாளில இதெல்லாமா பண்றாங்க- புட்டு புட்டு வைத்த TTFன் காதலி ஷாலின் சோயா

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள டிடிஎப் வாசனின் காதலி ஷாலின் சோயா, அந்நிகழ்ச்சி பற்றி பலரும் அறிந்திடாத தகவல்களை பகிர்ந்துள்ளார்.

2 Min read
Ganesh A
Published : May 06 2024, 01:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Shaalin zoya, TTF vasan

Shaalin zoya, TTF vasan

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5-வது சீசன் கடந்த மாதம் தொடங்கியது. கடந்த நான்கு சீசன்களாக இந்த நிகழ்ச்சியின் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் விலகியதால், அவருக்கு பதில் மாதம்பட்டி ரங்கராஜன் புது நடுவராக களமிறங்கி உள்ளார். அதுமட்டுமின்றி இந்நிகழ்ச்சியில் ஏராளமான புது கோமாளிகளும் எண்ட்ரி கொடுத்துள்ளனர். அவர்களின் காமெடி கலாட்டாக்களுடன் இந்த சீசன் அலப்பறையாக ஆரம்பமாகி இதுவரை இரண்டு வாரங்களை கடந்துள்ளது.

25
youtuber TTF vasan

youtuber TTF vasan

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் இன்ஸ்டா பிரபலம் திவ்யா துரைசாமி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர் விடிவி கணேஷ், சீரியல் நடிகை சுஜிதா தனுஷ், யூடியூப்பர் இர்பான் போன்ற பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இவர்களுடன் மலையாள நடிகை ஷாலின் சோயாவும் பங்கேற்று உள்ளார். இந்த சீசனில் ரசிகர்களை அதிகம் கவர்ந்த போட்டியாளராகவும் ஷாலின் சோயா உள்ளார். இவரின் வெகுளித்தனமான கேரக்டர் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

35
TTF vasan Lover

TTF vasan Lover

நடிகை ஷாலின் சோயா தமிழிலும் ராஜா மந்திரி, கண்ணகி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் சமீபத்தில் பாப்புலர் ஆனதற்கு முக்கிய காரணம் டிடிஎப் வாசன் தான். அவருடன் நெருங்கி பழகி வந்ததை பார்த்ததும் இவர் தான் டிடிஎப் வாசனின் காதலி என்று நெட்டிசன்கள் பரப்பி வந்தனர். ஆனால் அதை உறுதி செய்யும் வகையில் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார் வாசன்.

அதில் என்னுடைய காதலி என ஷாலின் சோயாவை குறிப்பிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி அனுபவங்களை ஷாலின் பகிர்ந்துள்ளார். அதன்படி தனக்கு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததற்கு முக்கிய காரணமே டிடிஎப் தான் என கூறியுள்ள ஷாலின் சோயா, அவன் மட்டும் என்னுடைய வாழ்க்கையில் வரவில்லை என்றால் எனக்கி இந்த சான்ஸ் கிடைத்திருக்காது என நெகிழ்ச்சியுடன் கூறி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... OTT star : ஒரு எபிசோடுக்கு 18 கோடி சம்பளம்... ஓடிடியில் வசூல் ராஜாவாக வலம் வரும் நடிகர் யார் தெரியுமா?

45
TTF vasan lover in Cook With Comali

TTF vasan lover in Cook With Comali

அதேபோல் ஷாலின் குக் வித் கோமாளி போனதும் அந்நிகழ்ச்சியை நீ பார்க்காத என டிடிஎப் வாசனிடம் சொல்லிவிட்டாராம். ஏனெனில் அந்நிகழ்ச்சியில் குரேஷி, புகழ் ஆகியோர் ஷாலினின் கன்னத்தை கிள்ளி கிள்ளி பேசுவதை பார்த்து டிடிஎப் கடுப்பாகிவிடுவாராம். அதனால் அவரிடம் இந்நிகழ்ச்சியை பார்க்க வேண்டாம் என சொல்லிவிட்டதாக ஷாலின் கூறி உள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கேமரா எப்போதும் ரோலிங்ல தான் இருக்கும் என கூறி உள்ள ஷாலின் சோயா, அங்கு நாம் என்னவெல்லாம் செய்கிறோமோ அது ஒவ்வொன்றையும் படம்பிடித்துக் கொண்டுதான் இருப்பார்கள் என தெரிவித்துள்ளார். ரியாலிட்டியாக இருக்க வேண்டும் என்பதற்காக அப்படி செய்கிறார்கள் என்று ஷாலின் கூறி இருக்கிறார். 

55
TTF vasan lover Shaalin zoya

TTF vasan lover Shaalin zoya

டிடிஎப் குறித்து பேசுகையில், இவரைப் போன்ற ஃபேன் பாலோயிங் கொண்ட யூடியூப்பரை நான் இதுவரை பார்த்ததில்லை என கூறியுள்ள ஷாலின் சோயா, தன்னிடமே நிறைய பேர், ஏன் இவன்கூட பழகுற என்றெல்லாம் கேட்டார்கள். வெளியில் இருந்து பார்த்தால் வாசனை பற்றி தெரியாது, அவனுடன் பழகி பார்த்தால் தான் தெரியும் அவனின் உண்மையான குணம் என்று ஷாலின் பேசி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... Bayilvan Ranganathan: நாக்கு அழிகிடும்.. பயில்வான் மகள் ஒரு லெஸ்பியனா? காதல் பற்றி கூறி ஷாக் கொடுத்த ஷகிலா!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குக் வித் கோமாளி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved