MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • OTT star : ஒரு எபிசோடுக்கு 18 கோடி சம்பளம்... ஓடிடியில் வசூல் ராஜாவாக வலம் வரும் நடிகர் யார் தெரியுமா?

OTT star : ஒரு எபிசோடுக்கு 18 கோடி சம்பளம்... ஓடிடியில் வசூல் ராஜாவாக வலம் வரும் நடிகர் யார் தெரியுமா?

திரையரங்கை போல் ஓடிடியும் அசுர வளர்ச்சி அடைந்துள்ள நிலையில், அதில் நடிக்க அதிக சம்பளம் வாங்கும் நடிகர் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : May 06 2024, 12:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

ஓடிடி தளங்கள் கடந்த சில ஆண்டுகளாக அசுர வளர்ச்சி கண்டுள்ளன. குறிப்பாக கொரோனா லாக்டவுன் சமயத்தில் திரையரங்குகள் மூடப்பட்டதால் மக்களின் பொழுதுபோக்குக்கு பெரிதும் உதவியது ஓடிடி தளங்கள் தான். அதன் பின்னர் புதுப்படங்களே நேரடியாக ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆக தொடங்கின. இன்று திரைப்படங்களின் டிஜிட்டல் உரிமையே பல கோடிக்கு விற்பனையாகி வருகின்றன. இதனால் ஓடிடி தளங்களில் நடிக்க முன்னணி நடிகர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

24

அந்த வகையில் ஓடிடியில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் பற்றிய விவரத்தை தற்போது பார்க்கலாம். அதன்படி ஓடிடி தளத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக அஜய் தேவ்கன் திகழ்ந்து வருகிறார். இவர் நடிப்பில் இந்தியில் ருத்ரா என்கிற வெப் தொடர் கடந்த 2022-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளிவந்த இந்த தொடருக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இந்த வெப் தொடர் லூதர் என்கிற பிரிட்டிஷ் தொடரின் ரீமேக் ஆகும்.

இதையும் படியுங்கள்... Bison Movie : வருகிறான் காளமாடன்... துருவ் விக்ரம் படத்திற்காக மாரி செல்வராஜ் வைத்த மாஸ் டைட்டில் இதோ

34

ருத்ரா வெப்தொடர் மொத்தம் 7 எபிசோடுகளை கொண்டது. இதில் ஒரு எபிசோடுக்கு ரூ. 18 கோடி வீதம் மொத்தம் 7 எபிசோடுக்கு ரூ.125 கோடி சம்பளமாக வாங்கி இருந்தார் அஜய் தேவ்கன். இதன்மூலம் வெப்தொடரில் நடிப்பதற்காக இந்தியளவில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர் என்கிற சாதனையை படைத்துள்ளார் அஜய் தேவ்கன். இவருக்கு அடுத்தபடியாக பேமிலி மேன் தொடரில் நடித்த ஸ்ரீகாந்த் திவாரி ஒரு எபிசோடுக்கு ரூ.10 கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறார்.

44

ஓடிடி மட்டுமின்றி சினிமாவிலும் அஜய் தேவ்கனுக்கு சம்பளம் வாரி வழங்கப்பட்டு வருகிறது. இவர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். படத்தில் அவர் வரும் காட்சிகள் வெறும் 8 நிமிடம் மட்டுமே இடம்பெறும், அதற்காக ரூ.35 கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறார் அஜய் தேவ்கன். இவர் நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Rathnam OTT Release : திரையரங்கில் கூட்டமில்லை... OTTக்கு பார்சல் செய்து அனுப்பப்பட்ட விஷாலின் ரத்னம்..!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அஜய் தேவ்கன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved