MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ஜெயிப்பதற்காகவே ஒவ்வொரு ரன்களாக எடுத்த ருதுராஜ் கெய்க்வாட் – ஹோம் கிரவுண்டில் சிஎஸ்கே வெற்றி!

ஜெயிப்பதற்காகவே ஒவ்வொரு ரன்களாக எடுத்த ருதுராஜ் கெய்க்வாட் – ஹோம் கிரவுண்டில் சிஎஸ்கே வெற்றி!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான 61ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.2 ஓவர்களில் 145 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
| Updated : May 12 2024, 07:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Chennai Super Kings vs Rajasthan Royals, 61st Match

Chennai Super Kings vs Rajasthan Royals, 61st Match

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 61ஆவது லீக் போட்டி எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
Chennai Super Kings vs Rajasthan Royals, 61st Match

Chennai Super Kings vs Rajasthan Royals, 61st Match

அதன்படி யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் இருவருமே ஒவ்வொரு ரன்னாக எடுத்து விளையாடினர். முதல் 6 ஓவர்களில் ராஜஸ்தான் விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்த ஓவரிலேயே ஜெய்ஸ்வால் 24 ரன்களில் ஆட்டமிழக்க, பட்லரும் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.

38
Chennai Super Kings vs Rajasthan Royals, 61st Match

Chennai Super Kings vs Rajasthan Royals, 61st Match

அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 15 ரன்களில் வெளியேற, ஷுபம் துபே 0 ரன்னில் ஆட்டமிழந்தார். ரியான் பராக் மற்றும் துருவ் ஜூரெல் ஓரளவு நின்று விளையாடி ரன்கள் எடுத்தனர். ஜூரெல் 28 ரன்களில் ஆட்டமிழக்கவே, ரியான் பராக் கடைசி வரை விளையாடி 47 ரன்கள் எடுத்தார். இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் மட்டுமே எடுத்தது.

48
Chennai Super Kings vs Rajasthan Royals, 61st Match

Chennai Super Kings vs Rajasthan Royals, 61st Match

பவுலிங்கைப் பொறுத்த வரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சிமர்ஜீத் சிங் 3 விக்கெட்டும், துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் 142 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியது.

58
Chennai Super Kings vs Rajasthan Royals, 61st Match

Chennai Super Kings vs Rajasthan Royals, 61st Match

இதில், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி நிதானமாக விளையாடினர். இதில், ரச்சின் ரவீந்திரா 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டேரில் மிட்செல் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். மொயீன் அலி 10 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த ஆறுச்சாமி 18 ரன்களில் நடையை கட்டினார். ரவீந்திர ஜடேஜா பீல்டரை வழி மறித்த நிலையில் மூன்றாவது நடுவர் மூலமாக அவுட் கொடுக்கப்பட்டு வெளியேறினார்.

68
Chennai Super Kings vs Rajasthan Royals, 61st Match

Chennai Super Kings vs Rajasthan Royals, 61st Match

இரண்டாவது ரன்னிற்கு ஓடும் போது அவரது டேரக்‌ஷனில் ஓடிய நிலையில், பின்னர், திரும்ப வந்த நிலையில் டேரக்‌ஷனை மாற்றி ஸ்டெம்பிம்பிற்கு நேராக ஓடி வந்துள்ளார். அப்போது சஞ்சு சாம்சன் ரன் அவுட்டிற்கு முயற்சித்த நிலையில் பந்து ஜடேஜா முதுகில் பட்டது. இதையடுத்து சாம்சன் அவுட் கேட்க, நடுவர் மூன்றாவது நடுவரை நாடினார். இறுதியில் அவர் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.

78
CSK vs RR IPL 2024

CSK vs RR IPL 2024

கடைசியில் சமீர் ரிஸ்வி களமிறங்க, கேப்டன் பொறுப்பை உணர்ந்து ஒவ்வொரு ரன்னாக எடுத்து விளையாடிய கெய்க்வாட் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 18.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

88
CSK vs RR IPL 2024

CSK vs RR IPL 2024

இந்த வெற்றியின் மூலமாக புள்ளிப்பட்டியலில் 14 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திற்கு முன்னேறியது. எனினும், கடைசி போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 16 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
எம். எஸ். தோனி
எம். எஸ். தோனி ஐபிஎல் ஓய்வு
ராஜஸ்தான் ராயல்ஸ்
ரியான் பராக்
ருதுராஜ் கெய்க்வாட்
சஞ்சு சாம்சன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved