MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Bayilvan Ranganathan: நாக்கு அழிகிடும்.. பயில்வான் மகள் ஒரு லெஸ்பியனா? காதல் பற்றி கூறி ஷாக் கொடுத்த ஷகிலா!

Bayilvan Ranganathan: நாக்கு அழிகிடும்.. பயில்வான் மகள் ஒரு லெஸ்பியனா? காதல் பற்றி கூறி ஷாக் கொடுத்த ஷகிலா!

பயில்வான் ரங்கநாதன் மகளை பற்றி, ஷகிலா மற்றும் குழலி இருவரும் பேசியபோது... மனம் நொந்து சுக்கு நூறாக உடைந்துள்ளார் மனுஷன். இந்த விஷயம் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். 

2 Min read
Author : manimegalai a
Published : May 06 2024, 01:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Bayilvan Ranganathan

Bayilvan Ranganathan

பயில்வான் ரங்கநாதன்:

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராகவும், திரைப்பட விமர்சகராகவும் அறியப்படும் பயில்வான் ரங்கநாதன்... தன்னுடைய தொழில் ரீதியாக சென்னையில் வசித்து வந்தாலும், இவர் பூர்வீகம் தூத்துக்குடி மாவட்டம், சிறுதொண்டநல்லூர் தான். 

27
Bayilvan Education

Bayilvan Education

படிப்பு:

தூத்துக்குடியில் உள்ள, சிறீ முத்துமலையம்மன் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிப்படிப்பை முடித்த இவர், சாயர்புரத்தில் உள்ள போப் கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்தார். கல்லூரி காலத்தில் இருந்தே பளுதூக்குதலில் ஆர்வம் காட்டி வந்தார் பயில்வான் ரங்கநாதன்.
 

37
Mister Madras Bayilvan Ranganathan

Mister Madras Bayilvan Ranganathan

காவலர் பணியில் ஆர்வம்:

நடிகராக மாறுவதற்கு முன் காவல் துறையில் பணியாற்ற விரும்பினார் பயில்வான் ரங்கநாதன். ஆணழகன் போட்டியில் கலந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்த இவர் மிஸ்டர் சென்னை பட்டத்தைப் பெற்றார். இவரது உடல் வாகைப் பார்த்து எம். ஜி. இராமச்சந்திரன், பயில்வான் என்று அழைத்தார். அதுவே இவரது அடைமொழியாக மாறியது. 

47
Bayilvan ranganathan Acting Movies

Bayilvan ranganathan Acting Movies

நடிப்பு:

பயில்வான் ரங்கநாதன் முந்தானை முடிச்சு படத்தில் வைத்தியர் வேடத்தில் நடித்து பிரபலமானார். இதுவரை சுமார் 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பயில்வான்... திரைப்பட விமர்சகராவும் அறியப்படுகிறார். குறிப்பாக சமீப காலமாக இவர் நடிகர் - நடிகைகள் பற்றிய அந்தரங்க வாழ்க்கை பற்றி பேசுகிறேன் என்கிற பெயரில் பலரின் கோபங்களை ஆளாகியுள்ளார்.

57
Bayilvan Ranganathan Fight:

Bayilvan Ranganathan Fight:

எகிறி கண்டனம்:

பயில்வான் ஒரு நடிகராக இருந்தும், அவரின் சக நடிகர் - நடிகைகள் பற்றி வாயிக்கு வந்ததையெல்லாம் அவ்வப்போது பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். இதன் காரணமாக, ஒருமுறை நடிகை ரேகா நாயர் வாக்கிங் வந்த பயில்வானை அடிக்க பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போல் ராதிகா, விஷால், போன்ற பலர் இவரை வசைபாடியதும் உண்டு.

67
Shakila take interview Bayilvan Ranganathan:

Shakila take interview Bayilvan Ranganathan:

ஷகிலாவின் பேட்டி:

ஏற்கனவே , ஷகிலாவை ஒருமுறை பேட்டி கண்ட பயில்வான் பல கேள்விகள் அவரிடம் கேட்ட நிலையில் ... தற்போது ஷகிலா பயில்வானிடம் பேட்டி எடுத்துள்ளார். இந்த பேட்டியில் அவருக்கு இதுவரை அவரின் கடைசி மகள் பற்றி தெரியாத அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார்.

77
Bayilvan Ranganathan Daughter Lesbian:

Bayilvan Ranganathan Daughter Lesbian:

பெண்ணை காதலிக்கும் பயில்வான் மகள்:

ஷகிலா, சினிமாவில் உள்ளவர்கள் வாழ்க்கை பற்றி பேசும் உங்களுக்கு உங்களின் கடைசி மகள் யாரை காதலிக்கிறார் என்று தெரியுமா என கேட்க... பயில்வான் முகம் வெளிறி போய் தெரியாது என கூறுகிறார். ஷகிலாவை தொடர்ந்து நடிகை குழலியும் இதை தான் நானும் கேட்க வேண்டும் என நினைத்தேன் என கூற... ஷகிலா உங்கள் மகள், ஒரு பெண்ணை காதலிக்கிறார் என கூறியதும், பயில்வான் நாக்கு அழகிடும் என தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்த... தொடர்ந்து பேசிய ஷகிலா உங்கள் மகள் பற்றி எனக்கு மிகவும் நெருக்கமான சிலர் என்னிடம் கூறியுள்ளனர். இது தான் உண்மை என கூற... பயில்வான் எதுவும் பேச முடியாமல் திகைத்து போய் அமர்ந்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved