நாயகன் 2-வா? மருதநாயகமா? புது போஸ்டரை வெளியிட்டு சஸ்பென்ஸை உடைத்த Thug Life படக்குழு
கமல்ஹாசனின் 69-வது பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு உள்ளது Thug Life படக்குழு.
thug life Kamal
நடிகர் கமல்ஹாசனும், மணிரத்னமும் நீண்ட கால நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இவர்கள் இதுவரை இணைந்து பணியாற்றியது ஒரே ஒரு படம் தான். அதுவும் தமிழ் சினிமாவே வியந்து கொண்டாடும் மாஸ்டர் பீஸ் படமான நாயகன். அப்படத்தின் அதிரிபுதிரியான வெற்றியை தொடர்ந்து இருவரும் கூட்டணி அமைக்கவே இல்லை. இவர்களின் காம்போவுக்காக 36 வருடங்களாக காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது இருவரும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
thug life teaser
கமலும் மணிரத்னமும் 36 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இணைந்துள்ளனர். இவர்கள் இணையும் படத்துக்கு தக் லைஃப் என பெயரிடப்பட்டு உள்ளது. இப்படத்தின் டைட்டில் டீசர், கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று ரிலீஸ் செய்யப்பட்டது. இதில் மருதநாயகம் கெட்டப்பில் இருக்கும் கமல் எதிரிகளை அடித்து துவம்சம் செய்யும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. அதோடு அதில் இரு முறை தனது கேரக்டர் பெயரை சொல்லி இருப்பார் கமல்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Thug Life Nayakan
தனது பெயர் ரங்கராய சக்திவேல் நாயக்கர், ஞாபகம் வச்சிக்கோங்க என அழுத்தமாக கூறி இருப்பார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் இது நாயகன் 2-ம் பாகமாக இருக்குமா என சந்தேகித்தனர். ஒருசிலரோ மருதநாயகம் படத்தின் கதையை இந்த காலத்திற்கேற்ப மாற்றி தான் இப்படத்தை மணிரத்னம் எடுக்க உள்ளதாக கூறினர். இப்படி இது நாயகன் 2-ம் பாகமா அல்லது மருதநாயகமா என குழப்பம் நீடித்து வந்த நிலையில், தக் லைஃப் படக்குழுவே அதனை சூசகமாக அறிவித்துள்ளது.
thug life new poster
அதன்படி நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தக் லைஃப் படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில், Ulaga நாயகன் என குறிப்பிட்டு உள்ளனர். அவர்கள் அதற்கு பயன்படுத்தியுள்ள Font ஸ்டைலும் அச்சு அசல் நாயகன் பட ஸ்டைலிலேயே உள்ளது. இதனால் இது நாயகன் 2ம் பாகமாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. மேலும் இதில் தான் ஒரு கேங்ஸ்டர் என்பதையும் தூத்துக்குடி அருகே உள்ள காயல்பட்டினத்தை சேர்ந்தவன் எனவும் கமல் கூறி இருக்கிறார். இதுவும் நாயகன் படத்தோடு ஒத்துப் போவதாக நெட்டிசன்கள் ஒப்பிட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... லண்டனில் சொகுசு வீடு, பிரைவேட் ஜெட் என ரியல் லைஃபிலும் பிக்பாஸ் ஆக வாழும் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு இவ்வளவா?