லண்டனில் சொகுசு வீடு, பிரைவேட் ஜெட் என ரியல் லைஃபிலும் பிக்பாஸ் ஆக வாழும் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு இவ்வளவா?
இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நடிகர் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு மற்றும் அவரின் சம்பள விவரம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Kamal Haasan
தமிழ் சினிமாவின் ஒரு அடையாளமாக திகழ்ந்து வருபவர் கமல்ஹாசன். தனது 4 வயதில் இருந்து நடித்து வரும் கமல், தற்போது 69 வயதாகியும் டாப் ஹீரோவாக வலம் வருகிறார். இன்றைக்கு தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் பலருக்கு கமல் தான் ஒரு ரோல் மாடலாக இருக்கிறார். அந்த அளவுக்கு சினிமாவுக்காக உழைத்துள்ள கமல், ஒரு பன்முகத்திறமை கொண்ட கலைஞனும் கூட. சினிமாவில் இவருக்கு எல்லாமே அத்துப்படி.
Kamal haasan Birthday
நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என கமல் அனைத்திலுமே ஸ்பெஷலிஸ்ட் ஆக இருந்துள்ளார். இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் ஒரு கலைஞனாக உள்ள கமல்ஹாசன், தற்போது 69 வயதிலும் அதிக படங்களை கைவசம் வைத்துள்ள நடிகராக இருக்கிறார். இவர் கைவசம் ஷங்கரின் இந்தியன் 2, மணிரத்னம் இயக்கும் தக் லைஃப், ஹெச்.வினோத் இயக்கத்தில் ஒரு படம், நாக் அஸ்வினின் கல்கி என இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.
Kamal haasan salary
இதுதவிர பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கு மத்தியில் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார் கமல். இப்படி 69 வயதிலும் நிற்க கூட நேரமின்றி பம்பரம் போல் சுழன்று கொண்டிருக்கும் கமல்ஹாசன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Kamal haasan Net worth
நடிகர் கமல்ஹாசன் கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது தனது சொத்து மதிப்பு ரூ.177 கோடி என காட்டி இருந்தார். ஆனால் தற்போது அவரது சொத்து மதிப்பு அதற்கு டபுள் மடங்கு ஆகி இருக்கும். ஏனெனில் கடந்தாண்டு அவர் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பின்னர் அவரின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது. தற்போது நான்கு படங்களை கைவசம் வைத்துள்ள கமல், ஒரு படத்துக்கு ரூ.130 கோடி வரை சம்பளமாக வாங்கி உள்ளாராம்.
kamal haasan assets
இதுதவிர ராஜ்கமல் என்கிற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். அந்நிறுவனம் தற்போது சிம்பு, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படங்களை தயாரித்து வருகிறது. அதன்மூலமும் கோடி கோடியாக சம்பாதித்து வருகிறார். இதுதவிர பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல்ஹாசனுக்கு ரூ.120 கோடி சம்பளம் தரப்பட்டுள்ளது. இப்படி கோடி கோடியாய் சம்பாதித்தாலும் அதானை மீண்டும் சினிமாவில் தான் முதலீடு செய்து வருகிறார் கமல்.
kamal haasan car collection
இவருக்கு சென்னையில் 2 பிரம்மாண்ட பங்களாக்கள் உள்ளன. அதன் மதிப்பு மட்டும் ரூ.19.5 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதுதவிர லண்டனிலும் சொகுசு வீடு ஒன்றை சொந்தமாக வாங்கி வைத்திருக்கிறார் கமல். அதன் மதிப்பு ரூ.2.5 கோடி இருக்குமாம். மேலும் தனது பயன்பாட்டுக்காக தனியாக ஜெட் விமானம் ஒன்றையும் வைத்திருக்கிறார் கமல்ஹாசன்.
கமல்ஹாசனிடம் பிஎம்டபிள்யு 7302LD, லெக்சஸ் Lx 570, ரூ.80 லட்சம் மதிப்புள்ள ஹம்மர் H3, ரூ.60 லட்சம் மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் எவோக், ரூ.1.19 கோடி மதிப்புள்ள ஆடி ஏ8, டொயோட்டா பிராடோ, பஜேரோ, பென்ஸ் இ220 போன்ற சொகுசு கார்கள் உள்ளன.
இதையும் படியுங்கள்... ச்சீ... ச்சீ.. மாஸ்க் கேட்ட நிக்சனிடம்... உள்ளாடையை காட்டிய மாயா - பூர்ணிமா! வெச்சு செஞ்ச அர்ச்சனா - தினேஷ்!