உள்ளே வந்த முதல் வாரத்திலேயே பிக்பாஸ் வீட்டில் இருந்து எவிக்ட் ஆன வைல்ட் கார்டு போட்டியாளர்! யார் தெரியுமா ?
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில், இந்த வாரம் வைல்ட் கார்டு போட்டியாளர் ஒருவர் தான் குறைவான வாக்குகளுடன், வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
BB Tamil 7
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த மாதம் அக்டோபர் 1-ஆம் தேதி மிக பிரமாண்டமாக துவங்கியது. இதில், கூல் சுரேஷ், பிரதீப் ஆன்டனி, விசித்ரா, ஜோவிகா, மாயா, பூர்ணிமா, ஐஷு, மணி சந்திரா, ரவீனா, நிக்சன், யுகேந்திரன், வினுஷா, விஜய் வர்மா, அனன்யா ராவ், உள்ளிட்ட மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த 6 சீசன்களை விட, பல மாற்றங்களுடனும்... புது பொலிவுடனும் துவங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் முதல் வாரத்திலேயே நாமினேஷன் படலம் படுத்தப்பட்டு ஓட்டிங் பிராசசும் துவங்கியது. இதில், யாரும் எதிர்பாராத விதமாக முதல் போட்டியாளராக அனன்யா ராவ் வெளியேறினார். இவரை தொடர்ந்து, முதல் வாரத்திலே பவா செல்லத்துரை உடல்நலன் பிரச்சனையால் வெளியேறுவதாக அறிவித்தார்.
BB Tamil 7
இவர்களை தொடர்ந்து, விஜய் வர்மா, வெளியேறிய நிலையில்... கடந்த வாரம், வினுஷா மற்றும் யூஹேந்திரன் ஆகிய இருவர் அதிரடியாக வெளியேற்றப்பட்டனர். மேலும் அர்ச்சனா, தினேஷ், பிராவோ, கானா பாலா, அன்ன பாரதி ஆகிய 5 பேர் உள்ளே நுழைந்தனர்.
BB Tamil 7
5 வைல்ட் கார்டு போட்டியாளர்களையும்... வீட்டின் உள்ளே நுழைந்த வேகத்தில், கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட பூர்ணிமா ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்பினார். கூடவே விசித்ராவும் அனுப்பப்பட்டார். இந்த வாரம், மாயா கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அவர் மீண்டும் வைல்ட் கார்டு போட்டியாளர்களை டார்கெட் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
Akshara Haasan: மும்பையில் புதிய வீடு வாங்கிய கமல்ஹாசன் மகள் அக்ஷரா! அடேங்கப்பா இத்தனை கோடியா?
BB Tamil 7
இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில், பிக்பாஸ் வைல்ட் கார்டு போட்டியாளர்கள் 5 பேர் மற்றும், ஐஷு, மாயா, மணி சந்திரா, அக்ஷயா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இவர்களின் இந்த வாரம் ஐஷு குறைவான ஓட்டுகளுடன் வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் தற்போது இந்த வாரம் யார் வெளியேறியுள்ளார் என்பது பற்றி, கிட்ட தட்ட உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த வாரம், வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே வந்த அன்ன பாரதி தான் முதல் வாரமே வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் வீட்டின் உள்ளே வந்த வேகத்தில் இவரை மக்கள் வெளியேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D