பெரியார் பிறந்தநாளில் அண்ணா பிறந்த மண்ணில் விழுந்த TTF வாசன்! மஞ்சள் வீரன் இயக்குனரின் அதிர்ச்சி பேட்டி!
TTF வாசன் கீழே விழுந்து வாரியத்தை கூட, மாபெரும் தலைவர்களுடன் ஒப்பிட்டு பேசி அதிர்ச்சியடைய வைத்துள்ளார் மஞ்சள் வீரன் பட இயக்குனர்.
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன், கடந்த செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் என்கிற பகுதியில், பைக்கில் அதிவேகமாக சென்று வீலிங் செய்தபோது, தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில் அவருக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதோடு மட்டும் இன்றி, ஆபத்தான முறையில், வண்டி ஓட்டியதற்காக சுமார் 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரை கோர்டில் ஆஜர்படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.
TTF Vasan Accident
இதையடுத்து, தனக்கு ஜாமீன் வேண்டும் என TTF வாசன் தரப்பில் இருந்து மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில், மூன்று முறைக்கு மேல் அவருக்கு ஜாமீன் கொடுக்க முடியாது என நீதிமன்றம் இவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இதை தொடர்ந்து, TTF வாசன் ஜாமீன் கோரிய மனு, நேற்று மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், மூன்று வாரங்கள் தினமும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
TTF Vasan
இந்நிலையில் நேற்று சிறையில் இருந்து வெளியே வந்த TTF வாசனுக்கு ரசிகர்கள், மற்றும் மஞ்சள் வீரன் படத்தின் இயக்குனர் ஆகியோர் வரவேற்பு கொடுத்தனர். ஜாமீனில் வெளியே வந்த TTF வாசன், சர்வதேச லைசன்ஸ் பெற்று, தொடர்ந்து வண்டி ஓட்டுவேன் என கூறினார். இவரை தொடர்ந்து மஞ்சள் வீரன் பட இயக்குனர் செல்லம் பேட்டியில் கூறிய தகவல் தான், நெட்டிசன்கள் பலரை காண்டாக்கியுள்ளது.
TTF வாசன் பைக்கில் இருந்து கீழே விழுந்த செப்டம்பர் 17, பெரியார் பிறந்த நாள் என்றும, அதே போல் விபத்து ஏற்பட்டது அண்ணா பிறந்தா காஞ்சிபுரம் மாவட்டம். எனவே "பெரியார் பிறந்தநாளிலே, அண்ணா பிறந்த ஊரிலே விழுந்த TTF வாசன், இந்த தமிழ் மண்ணில் மாபெரும் தலைவனாக வருவான் என கோரியுள்ளார். செல்லத்தின் இந்த பேச்சை கடுமையாக விமர்சித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D