Akshara Haasan: மும்பையில் புதிய வீடு வாங்கிய கமல்ஹாசன் மகள் அக்ஷரா! அடேங்கப்பா இத்தனை கோடியா?
உலக நாயகன் கமலஹாசனின் இளைய மகளான அக்ஷரா ஹாசன், மும்பையில் பல கோடி மதிப்பில் புதிய ஃபிளாட் ஒன்றை வாங்கி உள்ள தகவல் வெளியாகி உள்ளது.
Kamal Haasan Daughter Akshara Haasan
உலக நாயகன் கமலஹாசன் போலவே, இவருடைய இரண்டு மகள்களும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஸ்ருதிஹாசன் இசை மற்றும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நிலையில், அவருடைய தங்கையான அக்ஷாரா ஹாசன் திரைப்பட இயக்கம் மற்றும் நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார்.
Akshara Haasan Debut Movie:
இவர் படித்து முடித்ததும் பல படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ளாமல், இயக்குனர் மணிரத்னத்தின் கடல், மற்றும் தன்னுடையை தந்தையின் சபாஷ் நாயுடு ஆகிய படங்களில் துணை இயக்குனராக பணியாற்றினார். இதை தொடர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு, தனுஷ் - அமிதாப்பச்சன் நடிப்பில் ஹிந்தியில் வெளியான ஷமிதாப் என்கிற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
Akshara Haasan Acting with Ajithkumar
இதைத் தொடர்ந்து தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு, சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'விவேகம்' படத்தில் அறிமுகமானார். பின்னர் கடாரம் கொண்டான், அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு, போன்ற திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக இவர் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'அக்னி சிறகுகள்'.
Aggini Siragugal Movie:
மூடர் கூடம் படத்தை இயக்கிய நவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோர் கதாநாயகன்களாக நடித்துள்ளனர். இந்த படத்தின் படபிடிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கொல்கத்தா, மாஸ்கோ, செயின் பீட்டர்ஸ் பார்க், கஜகஸ்தான், போன்ற இடங்களில் எடுத்து முடிக்கப்பட்ட நிலையில்... ஒரு சில காரணங்களால் திரைப்படம் வெளியாகாமல் உள்ளது. எனினும் விரைவில் இந்த படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Akshara Haasan buy a New House:
அக்ஷரா ஹாசன் திரைப்படம் இயக்குவது, துணை இயக்குனராக வேலை செய்வது போன்ற பணிகளில் அதிக கவனம் செலுத்தி வருவதால்... நடிக்கும் வாய்ப்புகள் தேடி வந்த போதிலும் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் மும்பையில் இவர் தனியாக பிரமாண்ட அப்பார்ட்மெண்ட் ஒன்றை ஃபிளாட் ஒன்றை வாங்கி உள்ள தகவல் வெளியாகியுள்ளது.
Akshara Haasan House Rate:
மும்பையில் 15 மாடி கட்டிடம் கொண்ட அப்பார்ட்மெண்டில், 13 ஆவது மாடியில் சுமார் 15 .75 கோடிக்கு அக்ஷாரா இந்த வீட்டை, ஒரு இளம் ஜோடிகளிடம் இருந்து வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. 2245 சதுர அடி கொண்ட இந்த வீட்டில், மூன்று கார்கள் நிறுத்தும் வசதிகள் இருப்பதாகவும், வீடு முழுவதும் ரிமோட் கண்ட்ரோலால் இயங்கக்கூடிய அதிநவீன முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பாலிவுட் பிரபலங்கள் பலர் வாழும் பாந்தரா பகுதியில் இந்த வீடு அமைந்துள்ள நிலையில், புதிய வீடு வாங்கியதற்காக அக்ஷராவுக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D