அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு இதுதான் காரணம்.. உண்மையை போட்டுடைத்த முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன்.!
அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அதிமுக - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இடையேயான உச்சக்கட்ட மோதலை அடுத்து பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக முதலில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறி அரசியல் அரங்கை அதிர வைதத்தார். பின்னர், கடந்த செப்டம்பர் 25ம் தேதி நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு வரவேற்பு அளித்த அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதையும் படிங்க;- திமுக திருந்தாது! அதிமுக பாஜக கூட்டணி முறிவு! வேறு ஏதோ காரணம் இருக்கு! சந்தேகத்தை கிளப்பும் டிடிவி.தினகரன்.!
மேலும், அதிமுக துணைபொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பாஜக உடனான கூட்டணி முறிவு என்பது 2 கோடி தொண்டர்களின் உணர்வு அதனை எடப்பாடி பழனிச்சாமியும் ஏற்றுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமல்ல சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதிமுக பாஜக கூட்டணி முறிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும் முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறியுள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன்;- 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணியிர் இருக்க வேண்டுமாம். அதன் மூலம் மோடி பிரதமராக வேண்டுமாம். அதேநேரம் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை முதலமைச்சர் வேட்பாளாரக ஏற்க வேண்டுமாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதை யாராவது ஏற்றுக்கொள்வார்களா? வாக்குச் வாசடியில் 5 பேர் 10 பேர் இருக்கிற ஒரு கட்சியின் தலைவரை முதலமைச்சராக்க வேண்டும் என்று சொல்லி 2.5 கோடி உறுப்பினர்களை கொண்ட கட்சியை வலியுறுத்தினால் அதனை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும். இதனால் தான் அதிமுக பாஜக முறிந்தது என தெரிவித்துள்ளார்.