Asianet News TamilAsianet News Tamil

மோடி ஜீக்கு எதிர்ப்பா... வாரணாசியில் 36 பேரின் வேட்புமனுவை தூக்கி வீசிய தேர்தல் ஆணையம்!

மோடியை எதிர்த்துப் போட்டியிடும் 55 வேட்பாளர்களில் 36 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மோடி, காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் உட்பட 15 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

55 nomination affidavits against PM Modi from Varanasi was rejected by the Election Commission sgb
Author
First Published May 16, 2024, 10:36 AM IST | Last Updated May 16, 2024, 10:36 AM IST

வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிட முன்வந்த நகைச்சுவை நடிகர் ஷியாம் ரங்கீலா உள்பட 36 பேரின் வேட்புமனுக்களை புதன்கிழமை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

இது குறித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் ரங்கீலா தனது ஆதங்கத்தைக் கூறியுள்ளார். "இந்தத் தொகுதியில் போட்டியிடும் 55 வேட்பாளர்களில், 36 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகக் கூறினார். அதே நேரத்தில் பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் உட்பட 15 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன" என்று அவர் தெரிவிக்கிறார்.

தனது ஆவணங்களை சரியான நேரத்தில் சமர்ப்பிக்கவும் தடை ஏற்படுத்தப்பட்டது என்றும் ரங்கீலா கூறினார். மாவட்ட மாஜிஸ்திரேட் அலுவலகம் தான் வேட்புமனு தாக்கல் செய்யும்போது உதவி செய்ய மறுத்துவிட்டது என்றும் நியாயமற்ற முறையில் தான் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டுகிறார்.

"இன்று, மாவட்ட ஆட்சியர் என்னிடம் எனது ஆவணங்களில் சிக்கல் இருப்பதாகவும், நான் சத்தியப்பிரமாணம் செய்யவில்லை என்றும் என்னிடம் கூறினார். அவர்கள் என்னுடன் வழக்கறிஞர்களை உள்ளே அழைத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. என்னை தனியாக வரச்சொன்னார்கள். என் நண்பர் தாக்கப்பட்டார். மோடிஜி அழுது நாடகமாடலாம். ஆனால் நான் இங்கு அழ விரும்பவில்லை" என்று ரங்கீலா கூறினார்.

"நேற்று 27 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இன்று 32 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டைப் பார்த்து சிரிப்பதா அழுவதா" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வாரணாசி மாவட்ட மாஜிஸ்திரேட் தரப்பில் ரங்கீலாவின் பதிவுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், பிரமாணப் பத்திரத்தில் உள்ள குறைபாடுகள் மற்றும் நடைமுறை விதிகளுக்கு இணங்கத் தவறியது ஆகிய காரணங்களுக்காகவே ரங்கீலாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது என்று விளக்கம் கொடுத்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios