- Home
- Gallery
- Mathew thomas : பயங்கர விபத்தில் சிக்கிய லியோ பட நடிகரின் குடும்பம்... ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி
Mathew thomas : பயங்கர விபத்தில் சிக்கிய லியோ பட நடிகரின் குடும்பம்... ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி
லியோ படத்தில் நடிகர் விஜய்யின் மகனாக நடித்த மேத்யூ தாமஸின் குடும்பத்தினர் சாலை விபத்தில் சிக்கியதில் ஒருவர் பலியாகி இருக்கிறார்.

Leo Movie mathew thomas
மலையாள திரையுலகில் இளம் நடிகராக வலம் வருபவர் மேத்யூ தாமஸ். இவர் தமிழில் நடிகர் விஜய்யின் லியோ படத்தில் நடித்து பிரபலமானார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் நடிகர் விஜய்க்கு மகனாக நடித்திருந்தார் மேத்யூ தாமஸ். இதைத்தொடர்ந்து தற்போது நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகர் மேத்யூ தாமஸ்.
Malayalam Actor Mathew Thomas
இவரது தந்தை பிஜு, தாய் சூசன், அண்ணன் ஜான் உள்பட குடும்பத்தினர் சிலர் கொச்சியில் நடைபெற்ற குடும்ப விழாவில் கலந்துகொள்ள காரில் சென்றிருந்தனர். அந்த விழா முடிந்து வீட்டுக்கு திரும்பும் போது, சாஸ்தாமுகல் தேசிய நெடுஞ்சாலையில் மேத்யூ தாமஸ் குடும்பத்தினர் சென்ற கார் விபத்தில் சிக்கியது. இதில் மேத்யூ தாமஸின் உறவினர் பீனா டேனியல் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருக்கு வயது 61.
இதையும் படியுங்கள்...Rajinikanth : என் நண்பன்; மதுரை வீரன் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது.. ரொம்ப மகிழ்ச்சி- ரஜினிகாந்த் வாழ்த்து
mathew thomas
மேலும் மேத்யூ தாமஸின் தாய், தந்தை, அண்ணன் ஆகியோர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மேத்யூ தாமஸின் அண்ணன் ஜான் தான் காரை ஓட்டிச் சென்றுள்ளார். அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
mathew thomas Family accident
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மேத்யூ தாமஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது குடும்பத்தினர் விரைவில் நலம் பெற வேண்டி அவரது ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருவதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்... வனிதா வீட்டை ஆபாச பட ஷூட்டிங்கிற்காக பயில்வான் பயன்படுத்தினார்... சுசித்ரா சொன்ன பகீர் தகவலால் பதறிய கோலிவுட்