Leo Pre Booking Date: தளபதி ரசிகர்கள் ரெடியா இருங்க.. தமிழகத்தில் 'லியோ' முன்பதிவு தேதி பற்றி வெளியான தகவல்!
'லியோ' திரைப்படம் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் ப்ரீ புக்கிங் தேதி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
Vijay - Lokesh Kanagaraj Combo
'விக்ரம்' படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பின்னர், தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய்யை வைத்து, 'லியோ' படத்தை இயக்கி உள்ளார். 'மாஸ்டர்' படத்தின் வெற்றிக்கு பின்னர் மீண்டும் விஜய், லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பல மடங்கு அதிகரித்துள்ளது.
Leo Cast Details
மேலும் இந்த படத்தில், விஜய்க்கு ஜோடியாக பல வருடங்களுக்கு பின்னர் திரிஷா நடித்துள்ளார். இவரை தொடர்ந்து தளபதிக்கு வில்லனாக, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கெளதம் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட 5 நடிகர்கள் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் முக்கிய ரோலில், கதிர், ப்ரியா ஆனந்த், பிக்பாஸ் ஜனனி, மடோனா செபாஸ்டியன், வையாபுரி, சோனியா அகர்வால் போன்ற பலர் நடித்துள்ளனர்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Leo Audio Launch Cancel:
சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கான பணிகள் மும்முரமாக நடந்து வந்த நிலையில், கடைசி நேரத்தில் ரசிகர்களின் பாதுகாப்பு கருதி, இசைவெளியீட்டு விழாவை ரத்து செய்வதாக இந்த படத்தை தயாரித்துள்ள செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிவித்தது. இந்த தகவல், தளபதி ரசிகர்களை கடும் அப்செட் செய்தாலும், படக்குழு அடுத்தடுத்து 'லியோ' படம் குறித்த அப்டேட் வெளியாகும் என தெரிவித்தது.
Leo Pre Booking:
இதைத்தொடர்ந்து லியோ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகி, ரசிகர்களை சற்று சாந்தப்படுத்தியது. மேலும் லியோ படத்தின் ட்ரைலர் அக்டோபர் 5-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், தற்போது, தமிழகத்தில் லியோ ப்ரீ புக்கிங் குறித்த தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி, அக்டோபர் 14ஆம் தேதி முதல் லியோ படத்திற்கான முன்பதிவு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
Leo Vs Jailer:
ஏற்கனேவ UK-வில் லியோவின் ப்ரீ புக்கிங் தொடங்கிய நிலையில், ஜெயிலர் படத்தின் சாதனையை முறியடித்துவிட்டது குறிப்பிடத்தக்கது. வசூலிலும் 'ஜெயிலரை' லியோ பீட் பண்ணுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.