MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • வேர்ல்ட் ஃபேமஸ் கேப்ஷனை தூக்கிய வெங்கட்? தளபதி 68 படத்தின் டைட்டில் இது தான் - தீயாய் பரவும் தகவல் இதோ!

வேர்ல்ட் ஃபேமஸ் கேப்ஷனை தூக்கிய வெங்கட்? தளபதி 68 படத்தின் டைட்டில் இது தான் - தீயாய் பரவும் தகவல் இதோ!

Thalapathy 68 Title : லியோ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் முழுவீச்சில் உருவாக்கி வருகின்றது அவருடைய 68வது திரைப்படம்.

2 Min read
Author : Ansgar R
Published : Dec 24 2023, 07:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Thalapathy 68 Crew

Thalapathy 68 Crew

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக தளபதி விஜய் தனது 68வது திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் நடிகைகளான பிரபுதேவா, பிரசாந்த், லைலா மற்றும் சினேகா உள்ளிட்ட பலரும் தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Bonda Mani : நகைச்சுவை நடிகர் போண்டா மணி திடீர் மரணம்... திரையுலகினர் அதிர்ச்சி

24
Mohan

Mohan

மேலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவின் மிக மூத்த நடிகரான மோகன் அவர்களும், காமெடி நடிகர் கஞ்சா கருப்பு அவர்களும் இந்த திரைப்படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தாய்லாந்து மற்றும் சவுத் ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்த படத்திற்கான படபிடிப்பு பணிகள் நடந்து முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடந்த வருகின்றது.

34
Thalapathy 68

Thalapathy 68

இவ்வருட இறுதிக்குள் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே தளபதி 68 திரைப்படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்கின்ற யுகங்களும் இணையத்தில் அதிக அளவில் எழுந்து வருகின்றது. அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் நிறுவனத்தின் அர்ச்சனா ஒரு தகவலை வெளியிட்டார். 

44
Greatest of All Time

Greatest of All Time

அதில் அவர் "தளபதி 68 பட டைட்டில் குறித்து இணையத்தில் பல விஷயங்கள் வளம் வருவதை நான் பார்க்கின்றேன். ஆனால் நீங்கள் நினைப்பது போல இந்த படத்தினுடைய தலைப்பு BOSS அல்லது PUZZLE அல்ல. மாறாக ஸ்பெஷலான விஷயம்தான் இந்த படத்தின் டைட்டில் ஆக வரவிருக்கிறது என்று கூறி ரசிகர்களின் அன்புக்கு நன்றி தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் பிரபல சினிமா விமர்சகர் ஒருவர் வெளியிட்ட தகவலின்படி தளபதி 68 திரைப்படத்திற்கு G.O.A.T என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது உலக அளவில் மிகவும் புகழ் பெற்ற ஒரு கேப்ஷன் என்பது அனைவரும் அறிந்ததே. Greatest of all time என்பதை சுருக்கி GOAT இன்று அழைப்பார்கள், ஆகவே இந்த தலைப்பை தான் வெங்கட் பிரபு தேர்வு செய்திருக்கிறார் என்றும், இது மிக மிக பொருத்தமான தலைப்பு என்றும் தற்பொழுது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

About the Author

AR
Ansgar R
பிரசாந்த் (நடிகர்)
விஜய் (நடிகர்)
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved