ரித்விக் முதல் நெல்சன் வரை.. களைகட்டிய ஜெயிலர் பட சக்சஸ் மீட் - சூப்பர் ஸ்டார் ரஜினியின் மாஸ் கிளிக்ஸ்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி வெளியாகி உலக அளவில் சுமார் 600 கோடி ரூபாய் வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது ஜெயிலர் திரைப்படம்.
Rythvik Jailer
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் அண்மையில் நடந்து முடிந்துள்ளது. திரைப்படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களும் இத விழாவில் கலந்து கொண்டனர். குறிப்பாக ரஜினியின் பேரனாக தோன்றி நடித்த ரித்விக் படக்குழுவிடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.
Rythvik Ramyakrishnan
இந்த வெற்றி விழாவிற்கு முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கும், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அவர்களுக்கும், இசையமைப்பாளர் அனிருத் அவர்களுக்கும், புதிய சொகுசு கார்கள் பரிசளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Rythvik Ramyakrishnan
மேலும் சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்த இந்த ஜெயிலர் திரைப்பட வெற்றி விழாவில், பட குழுவினர் அனைவருக்கும் ஜெயிலர் திரைப்பட பெயர் பொறிக்கப்பட்ட, தங்க காசுகள் வழங்கப்பட்டது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
Jailer
விரைவில் இந்த ஜெயிலர் திரைப்பட வெற்றி விழா நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளது. இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.