ஸ்வீட் புன்னகையோடு ஹாட் போஸ்... முதுகை முழுசா காட்டி கவர்ச்சியில் மிரட்டும் அதுல்யா ரவியின் கிக்கான போட்டோஸ்
துருக்கி நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை அதுல்யா ரவி, அங்கு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
Athulya Ravi
கோவைப் பெண்ணான அதுல்யா, கடந்த 2017-ம் ஆண்டு வெளிவந்த காதல் கண்கட்டுதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே தன்னுடைய வசீகர அழகால் இளசுகளின் மனதை கவர்ந்த அதுல்யாவுக்கு படிப்படியாக ரசிகர்கள் வட்டம் பெரிதானது. இதனால் இன்ஸ்டாகிராமிலும் பேமஸ் ஆனார் அதுல்யா.
Actress Athulya
காதல் கண்கட்டுதே படத்தில் அமைதியான ஹோம்லி பெண்ணாக நடித்திருந்த அதுல்யா, வி.இசட் துரை இயக்கிய ஏமாளி படத்தில் கவர்ச்சியாக நடித்து அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் அடுத்த சாட்டை, நாடோடிகள் 2, கேப்மாரி, முருங்கைக்காய் சிப்ஸ், எண்ணித்துணிக போன்ற படங்களில் நடித்தாலும் இதுவரை பெரியளவுக்கு அவருக்கு திருப்புமுனை கிடைக்கவில்லை.
Athulya Turkey vacation
தமிழில் பட வாய்ப்புகள், குறையத் தொடங்கியதை அடுத்து, டோலிவுட் பக்கம் சென்ற அதுல்யா, அங்கு மீட்டர் என்கிற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அப்படத்தில் நடிகர் கிரண் அப்பாவரத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார் அதுல்யா. கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வந்த இப்படம் படுதோல்வி அடைந்தது.
இதையும் படியுங்கள்... மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக திரையிடப்பட்ட ஜெயிலர் படம்.. திடீரென தியேட்டருக்குள் சிங்கநடை போட்டு வந்த ரஜினி
Athulya latest photoshoot
தற்போது நடிகை அதுல்யா கைவசம் ஒரு படம் மட்டுமே உள்ளது. டீசல் என்ற அப்படத்தில் நடிகர் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்துள்ளார் அதுல்யா. இப்படத்தை ஷண்முகம் முத்துசாமி என்பவர் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே ஜிவி பிரகாஷ் நடித்த அடங்காதே படத்தை இயக்கியவர் ஆவார்.
Diesel movie actress Athulya
டீசல் படத்துக்கு பின் பெரியளவில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால், தற்போது போட்டோஷூட் பக்கம் திரும்பி உள்ளார் அதுல்யா. அதுவும் வெளிநாட்டில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அதுல்யா.
Athulya viral photos
துருக்கி நாட்டுக்கு சுற்றுலா சென்றிருக்கும் அவர் அங்குள்ள கடற்கரையோரம் கவர்ச்சி பொங்க நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் படு வைரலாகி வருகின்றன. அதுல்யாவின் இந்த கவர்ச்சி ரூட் அவருக்கு பட வாய்ப்புகளை பெற்றுத்தருகிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... சூப்பர்ஸ்டாருக்கே விபூதியா! சூதாட்டத்தில் தோற்று ரூ.150 கோடியை இழந்தாரா ரஜினிகாந்த்? பிரபலம் சொன்ன பகீர் தகவல்