மாரிமுத்து இல்லை.. ஆனாலும் மாஸ் காட்டும் எதிர்நீச்சல்.. இந்த வார TRP - டாப்பில் உள்ள சீரியல்கள் என்னென்ன?
கடந்த சில ஆண்டுகளாகவே திரைப்படங்களை தாண்டி பெரிய அளவிலான வரவேற்பை பெற்று வருகிறது சீரியல்களில் என்று கூறினால் அது சற்றும் மிகையல்ல. சீரியலுக்கு கிடைக்கும் மிகப்பெரிய வரவேற்பு, பல புதிய சீரியல்களை துவங்க வழி வகுக்கிறது என்றே கூறலாம்.
Mr, Manaivi Serial
அந்த வகையில் மக்கள் மனதை பெரிய அளவில் கவர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஆறு இடங்களை பிடித்த சீரியல்கள் குறித்து இந்த பதிவில் காணலாம். குறிப்பாக இந்த ஆறு இடங்களையும் பிரபல சன் நிறுவனத்தில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மட்டுமே ஆக்கிரமித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஆறாவது இடத்தில் மிஸ்டர். மனைவி சீரியல் உள்ளது.
Iniya Serial
ஆலியா மானசா கதையின் நாயகியாக தோன்றி நடித்து, தனது மாமனார் மற்றும் பிற சில குடும்ப உறுப்பினர்கள் கொடுக்கும் தொல்லைகளை எல்லாம் தாங்கி தன் கணவனின் உதவியால் முன்னேறி வரும் இனிய தொடர் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
Sundari Serial
அதே போல நான்காவது இடத்தில் வானத்தைப்போல சீரியலும், கலெக்டராக பக்கா மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் சுந்தரி நாடகம் மூன்றாவது இடத்திலும் உள்ளது. இந்த இரண்டு சீரியல்களில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் மக்கள் மனதில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளார்கள் என்றால் அது மிகையல்ல.
Ethirneechal and Kayal
மேலும் இரண்டாவது இடத்தில் கயல் சீரியல் உள்ளது, அதேபோல நடிகர் மாரிமுத்து இல்லை என்றாலும் தொடர்ந்து மாஸ் காட்டி முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது எதிர்நீச்சல் சீரியல். நடிகர் மாரிமுத்து காலமான நிலையில் அவருடைய ஆதி குணசேகரன் கதாபாத்திரத்திற்கு மற்றொரு நடிகரை அந்நிறுவனம் தேடி வருவது குறிப்பிடத்தக்கது.