MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கதை சொன்ன லோக்கி.. பாராட்டி கட்டியணைத்த சூப்பர் ஸ்டார்.. தலைவர் 171 - சுவாரசிய அப்டேட் சொன்ன லோகேஷ் கனகராஜ்!

கதை சொன்ன லோக்கி.. பாராட்டி கட்டியணைத்த சூப்பர் ஸ்டார்.. தலைவர் 171 - சுவாரசிய அப்டேட் சொன்ன லோகேஷ் கனகராஜ்!

Lokesh About Thalaivar 171 : தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ் என்று கூறினால் அது மிகையல்ல. ஏற்கனவே உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களை இயக்கிய லோகேஷ், தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை இயக்க உள்ளார்.

1 Min read
Ansgar R
Published : Dec 17 2023, 09:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Loki Cinematic Universe

Loki Cinematic Universe

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ என்று தான் எடுத்த அனைத்து திரைப்படங்களையும் வெற்றி திரைப்படங்களாக மாற்றி இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக மாறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இந்த சூழலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்க உள்ள அவரது 171வது திரைப்படத்தை இயக்கவிருக்கிறார் அவர். 

மாயவன் பட Sequel ரெடி.. மீண்டும் இயக்குனராகும் பிரபல தயாரிப்பாளர் - கதையில் இணைந்த தளபதி பட வில்லன்!

24
Director Lokesh

Director Lokesh

ஏற்கனவே இந்த படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளில் இறங்கியுள்ள லோகேஷ் கனகராஜ், 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தலைவர் 171 படத்திற்கான படப்பிடிப்பு பணிகளை தூங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "தலைவர் 171" படம் குறித்து அவர் கூறிய தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம். 

34
Rajinikanth

Rajinikanth

"தலைவர் 171 படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ஒரு படமாக இருக்கும். மேலும் இதுவரை நான் கையாளாத ஒரு கதைக்களம் கொண்ட படம் இது. லியோ திரைப்படம் முடிந்ததும் சுமார் 4 மாத ஓய்வுக்கு பிறகு தற்பொழுது தலைவர் 171 படத்திற்கான கதையை எழுத துவங்கி உள்ளேன். இன்னும் நான்கு மாதத்தில் இந்த திரைக்கதை அமைக்கும் பணிகளை முடிந்த பிறகு படபிடிப்பு பணிகளை தூங்குவேன்".
 

44
Anirudh Ravichandran

Anirudh Ravichandran

"மேலும் இந்த கதையை நான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடம் கூறிய பொழுது பொறுமையாக கதையை கேட்ட அவர், இறுதியில் எழுந்து என்னை கட்டிப்பிடித்து எனக்கு வாழ்த்துக்களை கூறினார். அவர் பிற பட பணிகளில் ஈடுபட்டிருந்த போதும் கூட, அவ்வப்போது என்னிடம் கதை குறித்து தொடர்ச்சியாக கேட்டு வருகிறார். இந்த கதை விவாதத்தின் போது அனிருத் அவர்களும் என்னுடன் இருந்தது குறிப்பிடத்தக்கது" என்றார் அவர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

About the Author

AR
Ansgar R
அனிருத் ரவிச்சந்தர்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved