- Home
- Gallery
- 30 பிளாப் படங்களை கொடுத்த பிரபல டாப் ஹீரோவின் தம்பி.. ஆனா அவரின் சொத்து மதிப்பு ரூ.500 கோடி..
30 பிளாப் படங்களை கொடுத்த பிரபல டாப் ஹீரோவின் தம்பி.. ஆனா அவரின் சொத்து மதிப்பு ரூ.500 கோடி..
. 23 வருடங்களில் எந்த ஒரு வெற்றியும் கொடுக்காத நடிகர் ஒருவர், இன்னும் ஆடம்பர வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

திரையுலகில் நுழைந்த ஸ்டார் கிட்ஸ் அனைவருமே வெற்றி பெற்றி முன்னணி நடிகர்களாக மாறுகிறார்களா என்றால் இல்லை என்பதே பதில். சிலர் திரை வாழ்க்கையில் வெற்றி பெற்றாலும், பலர் தொடர் தோல்விகளை சந்தித்து நடிப்பை விட்டே விலகுகின்றனர். 23 வருடங்களில் எந்த ஒரு வெற்றியும் கொடுக்காத நடிகர் ஒருவர், இன்னும் ஆடம்பர வாழ்க்கையை நடத்தி வருகிறார். ஆம். இந்த நடிகரின் சகோதரர் ஒரு உச்ச நடிகர் ஆவார். அவர் வேறு யாருமல்ல அர்பாஸ் கான் தான்.
தரார் என்ற படத்தின் மூலம் அர்பாஸ் கான் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். இந்த படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. மேலும் பாக்ஸ் ஆபிஸில் வீழ்ச்சியடைந்தது. இதை தொடர்ந்து, அர்பாஸ் கான் சல்மான் கான் மற்றும் கஜோல் நடித்த பியார் கியா தோ தர்னா கியா திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகனாக நடித்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட்டானது.
தனது 23 ஆண்டு திரை வாழ்க்கையில், அர்பாஸ் கான், ஷாம் கன்ஷாம், ஹலோ பிரதர், சோச், தும்கோ நா பூல் பாயேங்கே மா துஜே சலாம் மற்றும் பல தோல்வி படங்களை வழங்கியுள்ளார். ஹல்ச்சுல், டப்பாங் 3, மலமால் வீக்லி, தபாங், ரெடி மற்றும் பல போன்ற அவரது பெரும்பாலான வெற்றி படங்கள் மல்டி ஸ்டார் படங்களாக உள்ளன.
நடிகர் என்பதை தாண்டி அர்பாஸ் கான் ன்றில்லாமல் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். கிக் தபாங், தபாங் 2 ஆகிய வெற்றிப்படங்களை அவர் தயாரித்துள்ளார் மேலும் சமீபத்தில் ரவீனா டாண்டன், பாட்னா சுக்லா நடித்த வெப் தொடரையும் தயாரித்துள்ளார்.
அர்பாஸ் கானின் தந்தை சலீம் கான் ஒரு பழம்பெரும் தயாரிப்பாளர் ஆவார். இவர் அமிதாப் பச்சன் மற்றும் பிற நட்சத்திரங்களை உருவாக்கியவர். அதே போல் அர்பாஸ் கானின் சகோதரர் சல்மான் கானின் தோல்விப் படங்கள் கூட ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்து வருகின்றன. ஆனால் அர்பாஸ் கான் பாலிவுட்டில் தடம் பதிக்க தவறிவிட்டார். எனினும் சிறிய கதாப்பாத்திரங்கள் மற்றும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை அவர் தயாரித்து வருகிறார்.
இதனிடையே நடிகர் அர்பாஸ் கான் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். மலாய்கா அரோராவை பிரிந்த பிறகு, அர்பாஸ் கான், மேக்கப் கலைஞர் ஷுரா கானை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். அவர் தற்போது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
அர்பாஸ் கான் ஒரு படத்திற்கு ரூ 10-15 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது, மேலும் அவர்ச மீபத்தில் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவின் ஒரு பகுதியை தொகுத்து வழங்கினார். அர்பாஸ் கானின் சொத்து மதிப்பு ரூ. 500 கோடி என்று கூறப்படுகிறது. அவர் அர்பாஸ் கான் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.