- Home
- Gallery
- மாயவன் பட Sequel ரெடி.. மீண்டும் இயக்குனராகும் பிரபல தயாரிப்பாளர் - கதையில் இணைந்த தளபதி பட வில்லன்!
மாயவன் பட Sequel ரெடி.. மீண்டும் இயக்குனராகும் பிரபல தயாரிப்பாளர் - கதையில் இணைந்த தளபதி பட வில்லன்!
Maaya One Movie : கடந்த 2017 ஆம் ஆண்டு பிரபல தயாரிப்பாளர் சி.வி குமார் அவர்கள் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் "மாயவன்", பிரபல நடிகர் சுந்தீப் கிஷன் இந்த திரைப்படத்தில் நாயகனாக நடித்திருந்தார்.

Attakathi Movie Producer
"திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்", திரைத்துறையில் இந்த பெயரை கேள்விப்படாதவர்களே இருக்க முடியாது என்றே கூறலாம். அந்த அளவுக்கு பிரபலமான ஒரு தயாரிப்பு நிறுவனம் தான் இது. கடந்த 2012 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் பா. ரஞ்சித் இயக்குனராக அறிமுகமான "அட்டக்கத்தி" என்கின்ற திரைப்படத்தின் மூலம், தயாரிப்பாளராக தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் தான் சி.வி குமார்.
Producer CV kumar
அதன் பிறகு கார்த்திக் சுப்புராஜின் "பீட்சா", நலன் குமாரசாமியின் "சூது கவ்வும்", இயக்குனர் ரமேஷின் "தெகிடி" மற்றும் இயக்குனர் பிரசாத் ராமரின் "எனக்குள் ஒருவன்" உள்ளிட்ட பல நல்ல திரைப்படங்களை தயாரித்து தமிழ் திரையு உலகிற்கு வழங்கியவர் இவர் தான்.
இந்த சூழலில் தயாரிப்பாளர் சி.வி குமார், இயக்குனராக கடந்த 2017 ஆம் ஆண்டு அவதாரம் எடுத்து இயக்கி வெளியிட்ட திரைப்படம் தான் "மாயவன்" ஒரு சயின்ஸ் பிக்க்ஷன் திரில்லர் திரைப்படமாக ஒரு நல்ல வரவேற்பை பெற்ற படமாக இது மாறியது. இந்நிலையில் சுமார் 6 ஆண்டுகள் கழித்து அந்த படத்தின் சீக்குவல் கதையை எடுக்கும் பணியில் தற்பொழுது ஈடுபட்டு இருக்கிறார் குமார்.
Actor Neil Mukesh
நான்காவது முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்த அவர் மாயவன் படத்தின் sequelக்கு "மாயா ஒன்" என்று பெயரிட்டுள்ளார். பிரபல நடிகர் சுந்தீப் கிஷன் அவர்கள் நடிக்கும் இந்த படத்தில், தளபதி விஜய் அவர்களின் கத்தி திரைப்படத்தில் நடித்து பிரபலமான நடிகர் நீல் என் முகேஷ் அவர்கள் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை சி.வி குமார் அவர்களை தனது பிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.