Appukutty : தான் படித்த பள்ளிக்கு 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தாராள மனசுடன் அள்ளி கொடுத்த அப்புக்குட்டி
நகைச்சுவை நடிகர் அப்புக்குட்டி நாதன் கிணறு பகுதியில் அமைந்துள்ள தான் படித்த பள்ளிக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து உதவி இருக்கிறார்.
appukutty
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாதன் கிணறு என்கிற கிராமத்தை சேர்ந்தவர் தான் அப்புக்குட்டி. இவரது இயற்பெயர் சிவபாலன். சினிமா ஆசையுடன் சென்னைக்கு வந்த இவர் ஆரம்பத்தில் ஓட்டலில் சப்ளையராக வேலை பார்த்து வந்தார். அப்போது ஓட்டலுக்கு வரும் சினிமா பிரபலங்களிடம் வாய்ப்பு கேட்டு, படிப்படியாக சினிமாவுக்குள் நுழைந்த இவர் ஆரம்பத்தில் சொல்ல மறந்த கதை, கில்லி, மாயாவி, அழகிய தமிழ் மகன் போன்ற படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார்.
Actor Appukutty
இதையடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த வெண்ணிலா கபடிக் குழு திரைப்படம் தான் அப்புக்குட்டிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அப்படத்தில் அப்புக்குட்டியின் நடிப்பு திறமையை பார்த்து வியந்த சுசீந்திரன் அவரை தான் இயக்கிய அழகர்சாமியின் குதிரை திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடிக்க வைத்தார். அதுவரை காமெடி வேடங்களில் மட்டும் நடித்து வந்த அப்புக்குட்டி, அழகர்சாமியின் குதிரை திரைப்படத்தில் தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை நிரூபித்து இருந்தார்.
இதையும் படியுங்கள்... Aadujeevitham : நடிகர் பிருத்விராஜ் உயிரைக்கொடுத்து நடித்த ஆடுஜீவிதம்... ஓடிடியில் எப்போ ரிலீஸ் தெரியுமா?
appukutty school
அப்படத்திற்காக அவருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அஜித்தின் வீரம், வேதாளம், சூர்யாவின் 24, சிம்புவுடன் வெந்து தணிந்தது காடு போன்ற படங்களில் நடித்த அப்புக்குட்டி, தற்போது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்கிற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தை ராஜி சந்திரா இயக்கி உள்ளார். அண்மையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது.
appukutty help for school students
இந்த நிலையில், அண்மையில் தனது சொந்த ஊரான நாதன் கிணறில் உள்ள முத்தாரம்மன் கோவில் திருவிழாவுக்கு சென்றிருந்த அப்புக்குட்டி, அங்குள்ள ஆரம்ப பள்ளிக்கு தேவையான மேஜை, கம்பியூட்டர், டிவி உள்பட ரூ.11 லட்சம் மதிப்பிலான பொருட்களை ஊர் மக்களுடன் சேர்ந்து பள்ளிக்கு சீராக கொடுத்து உள்ளார். அந்த பள்ளியில் தான் அப்புக்குட்டி படித்தாராம். தான் படித்த பள்ளியில் அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதால் இந்த உதவியை செய்ததாக அப்புக்குட்டி கூறி இருக்கிறார். அவரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
இதையும் படியுங்கள்... 30 பிளாப் படங்களை கொடுத்த பிரபல டாப் ஹீரோவின் தம்பி.. ஆனா அவரின் சொத்து மதிப்பு ரூ.500 கோடி..