வேட்டையாட இணையும் பகத் மற்றும் வடிவேலு.. சைலெண்டாக வெளியான டைட்டில் போஸ்டர் - படத்தின் பெயர் என்ன தெரியுமா?
Super Good Films : தமிழ் திரையுலகில் கடந்த பல ஆண்டுக்கான வெற்றிகரமாக பயணித்து வரும் தயாரிப்பு நிறுவனம் தான் ஆர்.பி. சௌதிரியின் சூப்பர் குட் பிலிம்ஸ். அந்த நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகவுள்ள படத்தில் பகத் மற்றும் வடிவேலு இணைந்துள்ளனர்.
Fahadh Faasil
மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இயக்குனராக திகழும் வந்த பாசில் அவர்களுடைய மகன் தான் ஃபகத் பாசில். கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ஒரு மலையாள திரைப்படத்தின் மூலம் இவர் திரை உலகில் அறிமுகமானார். அதன் பிறகு கடந்த 21 ஆண்டுகளாக மலையாள திரையுலகில் நல்ல பல படங்களில் நடித்து வருகின்றார் அவர்.
Vadivelu
இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் என்ற படத்தின் மூலம் இவர் தமிழ் திரையுலகிலும் களமிறங்கினார். தமிழ் மக்களும் இவருக்கு மாபெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர். குறிப்பாக லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மற்றும் மாறி செல்வராஜின் மாமன்னன் ஆகிய இரு படங்களும் இவருக்கு சிறப்பான படங்களாக அமைந்தது.
Maareesan Movie
இந்த சூழலில் சுதீஷ் ஷங்கர் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகும் ஒரு புதிய படத்தில் ஃபகத் பாசில் நடிக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் பிரபல நடிகர் வடிவேலுவும் நடிக்கின்றார். தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக பயணித்து வரும் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கும் நிலையில் முற்றிலும் மாறுபட்ட கதை அம்சம் கொண்ட இந்த படத்திற்கு மாரீசன் என்று பெயரிடப்பட்டுள்ளது.