தங்கையின் நிச்சயதார்த்தத்தில் குடும்பத்துடன் சேர்ந்து கியூட்டாக படுகா டான்ஸ் ஆடிய சாய் பல்லவி - வைரல் வீடியோ
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி தனது தங்கையின் திருமண நிச்சயதார்த்தத்தில் நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.
பிரேமம் படம் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டாப் ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருப்பவர் சாய் பல்லவி. இவர் நடிப்பில் தற்போது எஸ்.கே.21 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சாய் பல்லவி. இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார்.
எஸ்.கே.21 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், அதிலிருந்து லீவு எடுத்து சென்றுள்ளார் சாய் பல்லவி. அதற்கு காரணம் அவரது தங்கையின் திருமணம் தான். சாய் பல்லவிக்கு பூஜா கண்ணன் என்கிற தங்கை இருக்கிறார். இவரும் ஓரிரு படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். ஆனால் அக்கா அளவுக்கு பேமஸ் ஆக முடியாததால் நடிப்பை ஓரங்கட்டி வைத்துவிட்டார்.
இதையும் படியுங்கள்... காதலனை அறிமுகம் செய்த சாய் பல்லவியின் தங்கை.. விரைவில் திருமணம்?
இதனிடையே தன் அக்காவுக்கு முன்னதாகவே பூஜா திருமணத்துக்கு தயாராகிவிட்டார். அதுவும் காதல் திருமணம். இருவரது காதலுக்கும் குடும்பத்தினர் கிரீன் சிக்னல் காட்டியதை அடுத்து திருமண வேலைகளை முழுவீச்சில் தொடங்கினர். சாய் பல்லவியும் தன் தங்கையின் திருமணத்துக்காக தீயாய் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில், பூஜா - வினீத் ஜோடியின் திருமண நிச்சயதார்த்தம் குடும்பத்தினர் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் நடிகை சாய் பல்லவி தன் தங்கை மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து படுகர் இன பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனமான படுகா டான்ஸ் ஆடிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... சிவகார்த்திகேயன் 21 கம்மிங் சூன்.. First Look டீசர் பட்டாசா இருக்கு - முதல் ஆளாக Review சொன்ன நெல்சன்!