காதலனை அறிமுகம் செய்த சாய் பல்லவியின் தங்கை.. விரைவில் திருமணம்?
நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் தனது காதலனை இன்ஸ்டாவில் அறிமுகம் செய்துள்ளார்.
Sai pallavi
பிரேமம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான சாய் பல்லவி தென்னிந்தியா முழுவதும் கவனம் பெற்றார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தனக்கென தனி ரசிக பட்டாளத்தை கொண்டுள்ள சாய் பல்லவி அடுத்தடுத்து தெலுங்கு, தமிழ், மலையாளம் படங்களில் நடிக்க தொடங்கினார்.
தமிழில் சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார் சாய் பல்லவி. சமீபத்தில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான கார்கி விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது.
sai pallavi
இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் எஸ்.கே21 படத்திலும், தண்டல் என்ற தெலுங்கு படத்திலும் சாய் பல்லவி நடித்து வருகிறார்.
Sai Pallavi
சாய்பல்லவிக்கு பூஜா கண்ணன் என்ற தங்கை இருக்கிறார். இவர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் வெளியான சித்திரை செவ்வானம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
இவர் தனது அக்காவவை போலவே தொடர்ந்து படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரே படத்துடன் சினிமாவில் இருந்து விலகிக் கொண்டார்.
எனினும் பூஜா கண்ணன் தொடர்ந்து சமூக வலைதலங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்த சூழலில் பூஜா கண்ணன் தனது காதலரை இன்ஸ்டாவில் அறிமுகம் செய்துள்ளார்.
Sai Pallavi
இதுவரை தனது கிரைம் பார்ட்னராக இருந்த வினீத் விரைவில் தனது லைஃப் பார்டனராக மாற உள்ளதாகவும் பூஜா கண்ணன் தெரிவித்துள்ளார். மேலும் தானும் வினீத்தும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களை அவர் பகிர்ந்துள்ளார்.
பூஜாவுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் அவர் விரைவில் தனது திருமண தேதியை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.