'ஜெய் ஸ்ரீராம்' ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளாத குஷ்பூ.. பக்தியுடன் வெளியிட்ட கிளோஸப் புகைப்படம்!
நடிகை குஷ்பூ, ஜெய் ஸ்ரீராம் என கூறி, ராமரின் கிளோஸ் அப் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழா, இன்று ஜனவரி 22ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. குழந்தை ராமர் பிரதிஷ்டையை கொண்டாடும் விதத்தில், பிரதமர் மோடி, முதல் ஏராளமான பிரபலங்கள் இந்த நிகழ்சில் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார்கள். ஆனால் நடிகை குஷ்பூ ஏற்கனவே ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள போவதில்லை என தெரிவித்த நிலையில், தற்போது ஜெய் ஸ்ரீராம் என கூறி புகைப்படம் ஒன்றை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
நடிகையும்ம, பாஜக பிரமுகருமான குஷ்பு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள ஆதிபுரீஸ்வரர் மற்றும் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சில பாஜக நிர்வாகிகளுடன் சேர்ந்து, கோவிலில் தரிசனம் செய்து விட்டு, அங்குள்ள குப்பைகளையும் அகற்றினர். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, 'கோவிலை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி, பிரதமர் கோவில்களை சுத்தமாக வைத்து கொள்ள ஏற்படுத்திய ஸ்வச் பார்த் திட்டத்தை நினைவு கூர்ந்தார்.
பின்னர் ராமர் கோவில் திறப்புவிழா பற்றி பேசும் போது, கோவில்களை சுத்தம் செய்யும் பணி உள்ளது. கோவில்கள் சுத்தமாக இருந்தால் தான் பக்தர்கள் நிம்மதியாக சுவாமி கும்பிடுவார்கள். எனவே நான் ராமர் கோவில் திறப்புவிழாவில் கலந்து கொள்ளவில்லை என தெரிவித்தார். அதே போல் ராமர் மீண்டும் வரமாட்டாரா என 500 வருடமாக ஏங்கி கொண்டிருந்த பக்தர்கள் ராமரை மீண்டும் பிரதமர் மோடி ஆட்சியில் தரிசிக்க உள்ளதாக தெரிவித்தார்.
ராமர் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றாலும், 'ஜெய் ஸ்ரீ ராம்' என கூறி குழந்தை ராமரின் கிளோஸ் அப் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த போட்டோஸ் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.