MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • என் மாமியாரின் கனவை நனவாக்கிய பிரதமருக்கு கோடான கோடி நன்றி - மோடியின் செயலால் நெகிழ்ந்த குஷ்பு

என் மாமியாரின் கனவை நனவாக்கிய பிரதமருக்கு கோடான கோடி நன்றி - மோடியின் செயலால் நெகிழ்ந்த குஷ்பு

இயக்குனர் சுந்தர் சி-யின் தாயாரும் தனது மாமியாருமான தெய்வானையை பிரதமர் மோடியிடம் அழைத்து சென்றபோது எடுத்த புகைப்படங்களை நடிகை குஷ்பு பகிர்ந்துள்ளார்.

1 Min read
Author : Ganesh A
| Updated : Jan 21 2024, 11:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Sundar C mother meet PM Modi

Sundar C mother meet PM Modi

3 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றது மட்டுமின்றி திருச்சி, ராமேஸ்வரம், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார். அதுமட்டுமின்றி தன் கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து பேசினார். இந்த நிலையில், பிரதமர் மோடியின் தீவிர ரசிகையான தனது மாமியார் அவரை சந்தித்தபோது எடுத்த அழகிய புகைப்படங்களை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் குஷ்பு.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Khushbu Mother in Law meet PM Modi

Khushbu Mother in Law meet PM Modi

அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : “பிரதமர் மோடிக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பாத்தாது. 92 வயதாகும் எனது மாமியார் தெய்வானை அவர்கள் பிரதமர் மோடியின் தீவிர ரசிகை ஆவார். அவரை வாழ்வில் ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்கிற கனவோடு இருந்த அவருக்கு அது நனவான அழகிய தருணம் தான் இது. உலகில் மிகவும் பிரபலமானவரும், அனைவராலும் விரும்பப்படும் தலைவராகவும் இருப்பவர் பிரதமர் மோடி.

இதையும் படியுங்கள்... அரிச்சல் முனை கடற்கரையில் பிராணாயாமம் செய்து பூக்கள் தூவி வழிபட்ட பிரதமர் மோடி!

34
PM Modi meet deivanai

PM Modi meet deivanai

இவ்வளவு பெரிய பதவியில் இருந்தும் என் மாமியாரை மிகவும் அன்போடும் அரவணைப்போடும், மரியாதையோடும் அவர் வரவேற்றார். அன்பும், பாசமும் நிறைந்த வார்த்தைகளோடு அவர் பேசியதை பார்க்கும் போதும் மகனும் தாயும் பேசிக்கொண்டதுபோல் இருந்தது. இளைஞர்கள் முதல் முதியர்வர்கள் வரை அனைவருக்கும் அவரை பிடிக்கிறது. நிச்சயம் அவர் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர். 

44
Khushbu X post

Khushbu X post

உங்களது பொன்னான நேரத்தை எங்களுடன் செலவிட்டதை நாங்கள் என்றென்றும் மறக்கமாட்டோம். உங்களை சந்தித்ததில் என் மாமியார் குழந்தை போன்று துள்ளிக்குதிக்கும் அளவும் சந்தோஷத்தில் இருந்ததை அவரது கண்களில் என்னால் பார்க்க முடிந்தது. இவ்வளவு வயதிலும் அவர் சந்தோஷமாக இருப்பதை பார்ப்பதை தவிர எனக்கு வேறு எதுவும் தேவையில்லை. மோடி அவர்களே உங்களுக்கு எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன். உங்களுக்கு கோடான கோடி நன்றி” என உணர்ச்சி பொங்க பதிவிட்டுள்ளார் குஷ்பு.

இதையும் படியுங்கள்... ஶ்ரீரங்கத்தில் இருந்து அயோத்திக்கு சீதனம் எடுத்து செல்லும் பிரதமர் மோடி - என்ன சீதனம்?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இயக்குனர் சுந்தர் சி.
குஷ்பூ
நரேந்திர மோடி
பிரதமர் மோடி

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved